search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.
    • இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

    துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு சின்ன கடைத்தெருவில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் அலங்கார ரூபத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தார்.

    இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    மாடவீதிகளில் பிடாரி அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    • வலையில் சிக்கி இறந்து கிடந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மாறிய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). மரம் வெட்டும் தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி செல்வராஜ் காகனம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வலையை எடுத்து சென்றார்.

    ஏரியில் மீன் பிடிக்கும் வலையை போட்டு விட்டு காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது வலையில் கால் சிக்கிக் கொண்டது. பின்னர் தண்ணீரில் மூழ்கி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர் செல்வராஜ் தண்ணீரில் பிணம் மிதப்பதாக கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதுகுறித்து செல்வராஜின் மகன் ஜீவா மோரணம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை ஏரியில் இருந்து மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல்
    • நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி விற்பனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நவம்பர் 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நவம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் 22 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

    • கலெக்டர் தகவல்
    • பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர்.

    மாவட்ட கலெக்டர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இந்த மழையால் திருவண்ணா மலை சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழை விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி நெல் சாகுபடிக்கு மற்றும் வருங்கால மணிலா சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சாத்தனூர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • அண்ணனை ஊருக்கு அனுப்பிவிட்டு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் உடல்களை மீட்டு விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40), லாரிடிரைவர். இவருக்கு சரிதா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தன் அண்ணன் வெங்கடேசனை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

    அவரை தேவிகாபுரத்தில் பஸ் ஏற்றி விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது போளூரில் இருந்து தேவிகாபுரம் நோக்கி கோட்டி என்பவர் மொபட்டில் பிரகாஷ் என்ற நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.

    முடையூர் காளியம்மன் கோவில் அருகே வரும்போது 2 பேரின் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோட்டி, பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத் தினர் அவர்களை மீட்டு சிகிச் சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந் தார். பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை தீபத் திருவிழா கொடியேற்றம்.
    • துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும்.

    அதன்படி இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    நவம்பர் 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2668 அடி உயரமுள்ள அருணாசலேஸ்வரர் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ரெயில் சேவை தொடங்க வலியுறுத்தல்
    • உற்சாகத்துடன் குளித்து நீச்சல் பயிற்சியும் பெற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான சாத்தனூர் அணையில் தீபாவளி பண்டிகையான நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

    நேற்று காலை முதலே குடும்பம், குடும்பமாக அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூங்காக்கள், 117 அடி நிரம்பிய அணையின் முழு தோற்றம் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர். குழந்தைகள் விளையாட்டு பூங்காக்களில் ஆர்வமுடன் விளையாடியும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியை அடைந்தனர்.

    சிறுவர்கள், பெரியவர்கள் என இருவருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து நீச்சல் பயிற்சியும் பெற்றனர்.

    தமிழ்நாட்டிலேயே நன்னீர் முதலைகள் சாத்தனூர் அணையில் உள்ள முதலை பண்ணையில் தான் உள்ளது. காலையில் அணை பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மாலைவரை அணையில் பொழுதை கழித்து விட்டு மலையில் வீடு திரும்பினர்.

    மாலை நேரத்தில் அணையில் பொருத்தப்பட்டிருந்த வண்ண வண்ண விளக்குகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தனூர் அணைப்பகுதியின் அழகை ெரயில்களில் சென்று ரசித்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால் சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வந்த ெரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

    இந்த ெரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

    • வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் கோலாகல மாக தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 10 நாட் கள் நடைபெறும் தீபத்தி ருவிழா உற்சவத்தின் 7-வது நாளான 23-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவாக, 26-ந் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீப ஏற்றப்படுகிறது.

    மேலும், தீபத்திருவி ழாவின் தொடக்கமாக தொடர்ந்து 3 நாட் கள் காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்தப்படுவது வழக்கம் அதன் படி, நாளை துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, 15-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 16-ந் தேதி விநாய கர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங் கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், தீபத்தி ருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன் னேற்பாடுகளை சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநி துறை செயலாளர் க.மணிவாசன் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, கோவில் உள் பிரகாரங்கள், வெளிப்பிரகா ரங்கள். தேரோடும் மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வை யிட்டார்.

    விழாவுக்கு கூடுதலான பக்தர் கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், அதற்கான விரிவான முன்னேற்பாடு களை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக் குவரத்து உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்திட வேண் டும் என உத்தரவிட்டார்.

    மேலும், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது பக்தர்களை அனுமதிக்க ஏற்க னவே கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமு றையை பின்பற்றவும், 3ம் பிரகாரத்தில் உள்ள இட வசதி அடிப்படையில் எண்ணிக்கையை கணக்கிட்டு பக்தர்களை அனுமதிக்க வும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது, கலெக் டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலை வர் ஜீவானந்தம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் 2-வது கட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேட்டவலம் சாலையில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் குட்டி புகழேந்தி, சீனுவாசன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் ஹேமா சசிகுமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பிற்கு வரும் போதெல்லாம் திருவண்ணா மலை மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மாவட்டத்திற்கு பல வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தன.

    குறிப்பாகச் சொல்லப்போனால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, போக்குவரத்து மண்டலம் ஆகியவை அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி.

    தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொது மக்களுக்கு நன்மை விளைவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கான புதுமைப்பெண்கள் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தொமுச மாநில செயலாளர் சௌந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், வக்கீல் முரளி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சமயராஜ், ராயல் தியாகு, வட்ட செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட பிரதிநிதி வெங்கட் நன்றி கூறினார்.

    • 5-வது நாளாக இன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது
    • கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத் தில் சாத்தனூர், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 119 அடியாகும். தென் மேற்கு பருவ மழை காலத் தில் அணைக்கு நீர்வரத்து இருந்தது.

    தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை யின் நீர்மட்டம் உயர்ந்தது. 116 அடியை கடந்தும், நீர்வரத்து கிராமங்களில் பெய்துவரும் தொடர்ந்து அதிகரித்ததால், மழையால் கலசப்பாக்கம் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில், வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங் கியதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தென் பெண்ணை யாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால், அணை யில்இருந்து தென்பெண்ணை யாற்றில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் விநாடிக்கு 950 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை யாற்றில் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையில் 6,875 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    ஜவ்வாதுமலை அடிவார அருகே உள்ளமிருகண்டாநதி அணை மற்றும் சந்தவாசல் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.04 அடியாக உள்ளது. அணையில் 60.802 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு

    வரும் விநாடிக்கு 82 கனஅடி தண்ணீரும் செய்யாற்றில் வெளி யேற்றப்படுகிறது. இதேபோல், 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத் தோப்பு அணையின் நீர் மட்டம் 51 அடியை எட்டியது. அணையில் 180.291 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணைக்கு வரும் விநாடிக்கு 28 கனஅடி 28 தண்ணீரும் கமண்டலநதியில் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 4.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதால் கரையோரத் தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

    • உறவினர் வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கண்ணக்கந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 19). கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு கண்ணக்கந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். இன்று காலை அரட்டவாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பாலாஜி பைக்கில் சென்றார்.

    கொட்டகுளம் அருகே வரும்போது எதிரே கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், பாலாஜி ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பாலாஜி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அதே கிராமத்தை லாரி டிரைவர் உறவினர் என்பதால் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியை செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அழைத்துச சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

    மேலும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×