search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள்
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள்

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் 2-வது கட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேட்டவலம் சாலையில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் குட்டி புகழேந்தி, சீனுவாசன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் ஹேமா சசிகுமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பிற்கு வரும் போதெல்லாம் திருவண்ணா மலை மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மாவட்டத்திற்கு பல வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தன.

    குறிப்பாகச் சொல்லப்போனால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, போக்குவரத்து மண்டலம் ஆகியவை அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி.

    தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொது மக்களுக்கு நன்மை விளைவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கான புதுமைப்பெண்கள் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தொமுச மாநில செயலாளர் சௌந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், வக்கீல் முரளி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சமயராஜ், ராயல் தியாகு, வட்ட செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட பிரதிநிதி வெங்கட் நன்றி கூறினார்.

    Next Story
    ×