என் மலர்
திருவண்ணாமலை
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது
- போலீசாருக் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை நகரின் முக்கியமான சாலையாக தேரடி வீதி சாலை உள்ளது. நாள்தோறும் பல்லாயி ரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக சாலையின் நடுவில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளுக்கும் சாலை யோர ஆக்கிரமிப்புகளுக்கும் இடையில் உள்ள குறுகிய சாலை வழியாக தேரடி வீதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்திற்குள் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக தேரடி வீதியில் சாலையின் நடுவில் இருந்த பேரி கார்டுகள் அகற்றப்பட்டு சாலைகள் விசாலமாக காட்சி தருகிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலையை கடந்து செல்ல முடிகிறது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்கு வரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- ஆட்டோ பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஆரணி:
ஆரணி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கண்ணகிநகரை சேர்ந்தவர் ரகு (வயது 38). இவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டி ருந்த ஆடும், பக்கத்து வீட்டில் ராணி என்பவ ரின் வீட்டின் முன்பு கட்டப்பட் டிருந்த ஆடும் நேற்று பகலில் திடீரென மாயமானது.
உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் ஆடுகளை தேடினர். அப்போது ஆடுகளுடன் ஆட்டோவில் 2 பேர் சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி சாலை, அம்பேத்கர் நகர் அருகே ஆட்டோவில் ஆடுகளுடன் சென்ற 2 பேரை பிடித்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் வேலூர் மாவட்டம், அல்லாபுரம் பகுதியை சேர்ந்த சபரி (35), இவரது மனைவி நிஷா (31) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது.
இவர்கள் மீது வேலூர், சத்துவாச்சாரி உள் ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் ஆடு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் 2 ஆடுகளையும் பறிமுதல் செய்து அதன் உரிமையா ளர்களிடம் ஒப்படைத்தனர்.
- திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அலுவலகத்தில் வேளாண் களப்பணியாளர்களுக்கு மின்னணு வேளாண் சந்தை மற்றும் பண்ணை வர்த்தகம் குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 தாலுகாகளை சேர்ந்த வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த உதவி இயக்குநர்கள், வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட வேளாண் அலுவலர்களுக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர்கள் அசோக், ஏழுமலை, ராமநாதன், சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாபதி, விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், மேலாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
செய்யாறு அடுத்த தூசி நத்த கொள்ளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வெம்பாக்கத்தில் காஞ்சிபுரம்- கலவை சாலையில் தனியார் பள்ளி எதிரே குளக்கரையில் செல்வராஜ் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது செல்வராஜின் அருகே இரும்பு ராடும் அவரது தலையில் வெட்டு காயங்களும் இருந்தது. வாலிபரை மர்ம நபர் யாரோ இரும்பு ராடால் சரமாரியாக அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
- திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டனர். இரவு விடிய விடிய சோதனை நடந்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது.
கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வந்திருந்தார். அவர் இருந்தபோதே வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ. வே.கம்பன் வீடு உள்ளது. இங்கு நேற்று மாலை வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் இளமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 700 க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில் பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் ஜெ.செல்வம், நகர மன்ற உறுப்பினர் சிவில் சீனிவாசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், பேரவை மாவட்ட தலைவர் இளவழகன், வக்கீல் தாஸ், அடிஅண்ணாமலை சங்கர், செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
செய்யாறு:
செய்யாறு அடுத்த பாரசூர் பள்ள காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
மழைக் காலங்களில் வேலை சம்பந்தமாக வெளியே செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கடந்த 8 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகி்றோம். ஆனால் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று செய்யாறு -அணைக்கட்டு பாராசூர் கூட் ரோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் சாலை வசதிக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டது.
- ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது
- விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரிக்காத்தூர், மண்ட கொளத்தூர், நம்பேடு, ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் தரைப்பாலம், அமைக்கும் பணி.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, ஏரி கால்வாய் சீரமைப்பு பணி, உள்ளிட்ட சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை. கலெக்டர் முருகேஷ், நேரில் சென்று பார்வையிட்டு, திட்ட பணியில் குறித்து ஆய்வு செய்தார்.
திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆவின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சுரேஷ்குமார், உதவி பொறியாளர். தேவேந்திரன், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இந்திராணி, ஒன்றிய பொறியாளர்கள் குருபிரசாத், பழனி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
- முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்
- ஏராளானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதல் - அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் கீழ் பயன்பெறும் மாணவ-மாணவிகளுக்கு சில்வர் தட்டு, டம்ளர் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாக்கியலட்சு மிலோகநாதன், அண்ணாமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கவிதா அனைவரையும் வரவேற்றார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு மற்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரின் ஆலோசனைப்படி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் கலந்துகொண்டு, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் - அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 86 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 198-மாணவ- மாணவிகள் பயன்படுத்தும் வகையில் சில்வர் தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை மையப்பொறுப்பாளர்களிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல்கப்பார் (நிர்வாகம்), வடிவேல் (வேலை உறுதி திட்டம்), ஒருங்கிணைந்த வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாளர் சுகந்தி, ஒன்றியஅலுவலக பணியாளர்கள் சேகர், நிர்மல், ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள் மற்றும் மையப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- வாகனங்களில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கிறது
புதுப்பாளையம்:
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகிறது.
தெரு நாய்கள்
நாய்கள் ஒன்றோடு ஒன்று சாலையில் சண்டையிடுவதாலும், வேகமாக சாலையை கடந்து ஓடுவதாலும், கூட்டமாக முக்கிய சாலைகளின் நடுவே நின்று கொண்டு வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் சாலையில் நடந்து செல்வோரை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செங்கம் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் தெரு நாய்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என செங்கம் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வருகிற 5-ந்தேதி நடக்கிறது
- 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
திருவண்ணாமலை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தால் ஆண்டுதோறும் சீனியர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023-24-ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட உள்ளது.
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திருவண்ணாமலை மாவட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்த போட்டியில் விளையாட விரும்பும் வீரர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும் 1.9.1993-ம் ஆண்டுக்கு பிறகும் 31.8.2010-ம் ஆண்டுக்குள் பிறந்தவராக அதாவது 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் ஆதார் கார்டு அசல் மற்றும் நகல், 2 பாஸ் போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
கிரிக்கெட் வீரர் தேர்வு வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் ஸ்ரீஹன்ஸ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
- அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.
- சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.
உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் அடையாள அட்டையை சரிபார்த்த பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.