என் மலர்
திருவண்ணாமலை
- எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோட்டில் தனி யார் திருமண மண்டபம் அருகே அந்த வழியாக நடந்து சென்ற 70 வயது மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த மூதாட்டியார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் தப்பிய டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
- சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
வந்தவாசி:
வந்தவாசி பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. வெண்குன்றம், பாதிரி, அம்மையப்பட்டு, மும்முனி, சத்யா நகர், இந்திரா நகர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி யது.
சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவா னது. பலத்த மழை பெய்த தால் விவசாயிகளும் பொது மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 31). ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி நித்யா (25). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். லட்சுமிபதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனைவி நேற்று வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் திடீரென லட்சுமிபதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செய்யாறு போலீசார் லட்சுமிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகவல் அறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
- கடப்பாரை போன்ற கம்பிகளை கொண்டு காரை உடைத்து 7 பேர் உடல்களை மீட்டனர்.
செங்கம்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள டூம்கூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
காரில் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அந்தனூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்தது.
எதிர்பாராத விதமாக கார் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சின்னாபின்னமானார்கள்.
இந்த விபத்தில் காரில் இருந்த 2 சிறுவர்கள் ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் காருக்குள்ளேயே துடிதுடித்து இறந்தனர். ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
இந்த கோர விபத்தை கண்ட வாகன ஓட்டிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருபுறமும் இருந்து வந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காருக்குள் பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த பெண்ணை மீட்டனர். அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காருக்குள் மணிகண்டன் உள்பட 7 பேரும் உடல் சிதைந்த நிலையில் பிணமாக சிக்கி இருந்தனர். கடப்பாரை போன்ற கம்பிகளை கொண்டு காரை உடைத்து 7 பேர் உடல்களை மீட்டனர் .
மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
சுமார் 1½ மணி நேரம் மீட்பு பணிகள் நடந்தது. அதற்குப் பிறகு திருவண்ணாமலை பெங்களூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
பலியானவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவண்ணாமலையை நோக்கி விரைந்து வந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருக்கு அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.
இறந்தவர்கள் விவரம் வருமாறு;-
மணிகண்டன் (வயது42). ஹேமநாதன் (41). சின்னப்பா, மலர், சதீஷ்குமார், சர்வேஸ்வரன் (7), சித்தார்த் (3), இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
- கண்ணமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் 19 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதலில் ராகுல், 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இளங்கோவன் ஆகியோர் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கிஷோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் ராகுல், இளங்கோவன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடக்க உள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அன்புகுமரன் உடனிருந்தார்.
- கொலையா? போலீஸ் விசாரணை
- வி.ஏ.ஓ.வுக்கு தகவல் அளித்தனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள பயன்பாடு இல்லாத விவசாய கிணறு உள்ளது.
நேற்று மாலை அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வி.ஏ.ஓ.வுக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து அவர் பிரம்மதேசம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை தீயணைப்புப் படை வீரர்கள் கிணற்றில் மேற்பகுதியில் இருந்து முட்புதர்களை அகற்றி அழுகிய நிலையில் இருந்த சுமார் 85 வயதுடைய முதியவர் உடலை மீட்டனர்.
போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உற்சவ அம்மன் கொலு வைத்து அலங்காரம்
- பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு கோவில் மண்டபத்தில் உற்சவ அம்மன் கொலு வைத்து, 15-ந்தேதி பார்வதி அலங்காரமும், 16-ந்தேதி காமாட்சி அலங்காரமும், 17-ந் தேதி மாவடி சேவை அலங்காரமும், 18-ந் தேதி ஸ்ரீமீனாட்சி அலங்காரமும்,
19-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 20-ந் தேதி துர்காதேவி அலங்காரமும், 21-ந் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரமும், 22-ந் தேதி தனலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந் தேதி திருஅவதார அலங்காரமும் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை யும் நடக்கிறது. பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்
- திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் வழிபாடு
வேங்கிக்கால்:
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு ஏற்றதாகும். மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நினைவு கூற வேண்டும். மேலும் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த நாட்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுளுடன் புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
சாதாரண அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது 3தலைமுறை முன்னோர்களை சென்று சேரும். மகாளய அமாவாசை தினத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் தாய்வழி, தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமின்றி, நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமமாகும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை தினமான இன்று காலை ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம், கிரிவலப்பாதையில் உள்ள புனித தீர்த்த குளம் உள்ளிட்ட இடங்களில் கூடிய பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
- சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
- ஆற்றைக் கடக்க வேண்டாம் என அறிவுரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 119 அடியில் 116.55 அடியை எட்டியுள்ளது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது மழை காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 1,250 கனஅடியாக உள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-
கடந்த 1958-ம் ஆண்டு கட்டப்பட்ட அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக 119 அடியை எட்டியது.
கடந்தாண்டு செய்யப்பட்ட அணையின் மறு சீரமைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது.முன்னதாக 99 அடி வரை மட்டுமே நீரை சேமிக்க முடியும்.
தற்போது அணையின் கொள்ளளவான 7.32 டி.எம்.சி. யில் நேற்று 7.22 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.
இந்த அணையில் இருந்து 88 குளங்களுக்கு நீர் அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும் வரை சாத்தனூர் அணையில் இருந்து ஆற்றில் நீர் தொடர்ந்து வெளி யேற்றப்படும்.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 36 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றைக் கடக்க வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்டியலை உடைக்க முடியாததால் காணிக்கை தப்பியது.
- போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது.
கோவில் பூசாரியாக சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு வழக்கம் போல் கோவில் நடையை பூட்டி விட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தாலி, பெட்டகத்தில் இருந்த 2 பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற் காக கோவிலுக்கு வந்த கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.அவர்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது. மேலும்
கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முடியாததால் காணிக்கை தப்பியது.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கோவிலில் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
- ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்
திருவண்ணாமலை:
கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 162 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ மாணவிகள் இந்த மாத இறுதியில் மாநில உடற்கல்வி விளையாட்டு பல்கலை க்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
- அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.