search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றதும், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ராஜகோபுரம் வழியாக பொது தரிசன பாதையில் செல்லும் பக்தர்களும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசன பாதையில் செல்லும் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் சென்ற தரிசன வழியானது கோவிலுக்கு மட்டும் இன்றி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தென் சன்னதி தெரு வரை நீண்டு காணப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    மேலும் கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவி லில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

    இந்த கோவிலில் சிறிய இடுக்கு போன்று உள்ள பாதை வழியாக படுத்தவாறு சென்று வெளியேறி அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்வார்கள்.

    இதற்காக நேற்று இடுக்கு பிள்ளையார் கோவில் அருகிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று இடுக்கு பிள்ளையாரை வழி பட்டனர்.

    • 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள சாத்தம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.கூலி தொழிலாளி. மனைவி தீபா, மகன் விஷ்வா (வயது 7). மகள் காவியா (5).

    ஏழுமலை மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுடன் விஷ்வா, காவியா சென்றிருந்தனர். அந்த விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே அமர்ந்து சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் தீபா மாடுகளை கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தபோது விஷ்வாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவியாவிடம் விஷ்வா எங்கே என்று கேட்டார்.

    விஷ்வா கிணற்றின் அருகே சென்றதாக காவியா கூறினார். இதனால் பெற்றோர் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். அப்போது விஷ்வா கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து தெள்ளார் தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி விஷ்வாவை பிணமாக மீட்டனர்.

    உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள பி.எல்.தாண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீராம் (வயது 26). நேற்று நள்ளிரவு ஜெய்ஸ்ரீராம் அவரது நண்பர்களான சுனில்(21), பாலாஜி(26) ஆகியோருடன் பைக்கில் பி.எல்.தண்டா பகுதியிலிருந்து செங்கம் நோக்கி சென்றனர். முறையாறு அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெய்ஸ்ரீராம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஜெய்ஸ்ரீராமை செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வசதியாக, அனக்காவூர், எச்சூர் ஆகிய கிராமங்களுக்கு தலா ரூ.8.50 லட்சம் மதிப்பில் 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டு இருந்தன.

    அதேப் போல் அனக்காவூர், மேல்மா, மகாஜனம்பாக்கம், அனக்காவூர் ஆகிய கிராமங்களில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2.77 லட்சம் மதிப்பில் 3 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டு இருந்தன.

    இந்த நிகழ்ச்சி அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமைத் தாங்கினார்.

    செய்யாறுஒ.ஜோதி எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் பங்கேற்று டிராக்டர்கள் மற்றும் மின்கலன் வண்டிகளை ஊராட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதில் மாவட்டக் கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதிகா குமாரசாமி, கனிமொழி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், அனக்காவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.கே.ரவிக்குமார், திராவிட முருகன், மோ.ரவி, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
    • 697 பேர் பயணடைந்தனர்

    வேங்கிக்கால்:

    புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம் வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் 161 புதிய உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆயிரத்து 697 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினர்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார். பொது மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

    • ஏர் உழவு பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
    • தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக விவசாயி உயிர் தப்பினார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நெமந்தகார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் நெல் பயிரிடு வதற்காக பாதிரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது 2 மாடுகள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் 2 மாடுகளும் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்ட சின்னப் பையன் அங்கிருந்து தப்பி ஓடியதால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாடுகளை பார்த்து சென்றனர்.

    • பொதுமக்கள் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் சம்சு மொய்தின் என்பவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தங்கம், வெள்ளி பொருட்கள், திருமண சீர்வரிசை சாமான்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதன்படி ஏராளமானோர் ஏஜென்ட் மூலமாக செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் சீட்டு நிறுவனர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது.

    மேலும் அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தனியார் சீட்டு நிறுவனர் சம்சு மொய்தினை கைது செய்தனர்.

    இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் அவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க ப்படவில்லை.

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி -ஆரணி சாலையில் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் தனியார் சீட்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    மேலும் உயர் அதிகாரிகளிடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வாகனங்கள் அணிவகுத்து நின்றன
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றனர்.

    14-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது எதிரே வந்தவாகனத்திற்கு வழி விட முயன்றபோது மலையில் இருந்து கிழே இறங்கிய கார் மீது தனியார் பள்ளி பஸ் உரசியது.

    இத னால் பஸ் செல்ல முடியாமல் கொண்டை ஊசி வளைவில் நின்றது. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • நகராட்சி கமிஷனர் உத்தரவு
    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி திங்கட்கிழமை திருவண்ணாமலை நகரத்தில் உள்ள இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு உத்தரவின்படி அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி நாளில் திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    • நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தலித் மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர்.

    நகர இணைச் செயலர் ம.விஜய் தலைமை வகித்தார். இளஞ்சி றுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டேனியல், நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலர் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் சி.விநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலர் மு.காளிதாசன் வரவேற்றார்.

    மண்டல துணைச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தலையை மொட்டையடித்து கொண்டார். முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து பாடை கட்டி ஊர்வலமாக சென்றனர்.

    • அக்டோபர் 6-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது
    • மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதுநாள் வரை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிவகுப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன்பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். அக்டோபர் மாதம் 6-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும்நேரடி சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

    • சாமிக்கு மாலை அணிவித்து வழிபாடு
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையுடன், ரத உற்சவம் நடைபெற்றது.

    இந்த ரத உற்சவத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமிக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். இன்னொரு மாலையை தங்களுக்கு திருமணம் வேண்டி சாமிக்கு அணிவித்து வாங்கிச் சென்றனர்.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×