என் மலர்
திருவண்ணாமலை
- மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர்
- 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சிறுமூரில் உள்ள ஸ்ரீ சிறுபாத்தம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளி திருவிழா கோலாகலமாக நடந்தது.
இதனையொட்டி இன்று எருது விடும் திருவிழா நடந்தது. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் எருது விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின.
தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.
- மகாதீபாராதணை நடைபெற்றது
- கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று 4-ம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகாதீபாராதணை நடைபெற்றது.
பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ரத்தினகிரி பாலமுரு கனடிமை சுவாமிகள், முன்னாள் எம் எல் ஏ பன்னீர்செல்வம், ஆரணி ஜோதிடர் குமரேசன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் தந்தனர்.
கோயில் சார்பில் கணேஷ் சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினார். மாலையில் நாதஸ்வர கச்சேரி நடந்தது. இரவில் நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் மாடவீதி உலா நடைபெற்றது.
ஊர்வலத்தில் கரகாட்டம், நையாண்டி மேளதா ளத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
- அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
வேங்கிகால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
குறிப்பாக, அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
கோவில் வெளி பிரகாரம் முதல் பொது தரிசன வரிசை, முலவர் சன்னதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனா. சுமார் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.
மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
- போலீசார் விசாரணை
- வைக்கோல் வைத்துக் கொண்டிருந்த போது விபரீதம்
செய்யாறு:
சேத்துப்பட்டு அடுத்த மேலப்பாளையம் சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயி. இவரது மனைவி காமாட்சி (வயது 60). இவர்கள் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
கடந்த 4-ந் தேதி மாடுகளுக்கு தண்ணீர் மற்றும் வைக்கோல் வைப்பதற்காக காமாட்சி வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றார்.
ஒரு மாடுக்கு வைக்கோல் வைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று காமாட்சி முட்டி தள்ளியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜு காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காமாட்சியின் கணவர் அண்ணாமலை பெரணமல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புரந்தீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ இந்திரபிரசாதவள்ளி அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு லட்சார்ச்சனை வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ புரந்தீஸ்வரருக்கும் ஸ்ரீ இந்திர பிரசாத வள்ளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமான பால் தயிர் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி மனநிம்மதி பெறுவதற்கும் ஸ்ரீ இந்திர பிரசாத வள்ளி அம்மனுக்கு பக்தர்களின் கைகளால் லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர்.
மங்கள மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ இந்திர பிரசாத வள்ளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 16 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது
- தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள காரம் ஊராட்சி, மதுரா மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் முத்துவேல் கருணாநிதித நகர் உள்ளது. இதில் 38 குடும்பத்தினர் வசுத்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மலையில் பற்றிய தீ வேகமாக பரவியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நகரில் இருந்த 16 குடிசை வீடுகள் தீவிபத்தில் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவல் கேள்விப்பட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இ.எஸ்.டி.கார்த்திகேயன், காரம் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியான், வந்தவாசி நகர செயலாளர் ஆ.தயாளன், வந்தவாசி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள், ஆகியோர்கள் தீ பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் மதன்குமார், கிஷோர் குமார், அயலக அணி துணை அமைப்பாளர் ஆரிப், தென்னாகூர் தினகரசு, மாவட்ட பிரதிநித தியாகராஜன், காரம்முத்து, கிளைச் செயலாளர் சித்திக், பிரதிநிதி ஆஜா, ஆகிய தி.மு.க.வினர். உடன் இருந்தனர்.
- மயக்க பொடி தூவி துணிகரம்
- போலீசார் தீவிர விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் (வயது 70). இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
வீட்டின் அருகே சென்னம்மாள் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை காரில் 2 ஆண்களுடன் வந்த மர்மபெண் நீண்ட நேரமாக சென்னம்மாளை நோட்டமிட்டார்.
திடீரென அந்த பெண் சென்னம்மாளிடம் சென்று உங்களுடைய கணவரிடம் நான் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன், அதனை திருப்பி தருவதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.
இதனால் செல்லம்மாள் அவர்களை வீட்டின் முன் அழைத்து சென்றார்.
பின்னர் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்தை கையில் வாங்கினார். அந்த நேரத்தில் மூதாட்டி மீது மயக்கபொடி தூவினர். சிறிது நேரத்தில் சென்னாம்மள் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து பார்த்தார்.
அப்போது அந்த மர்ம பெண்ணும் அவர்களுடன் இருந்த 2 பேரும் மாயமாகி உள்ளனர். மேலும் கட்டில் அடியில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னம்மாளின் கணவர் பாலகிருஷ்ணன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியிலும் இதே போல அந்த மர்ம பெண் தனியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் உறவினர் என்று கூறி 8 பவுன் நகை கொள்ளையடித்த சென்றுள்ளனர்.
இதே போல கலசப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்து கதறி அழுது பெண் 13 பவுன் நகையை நேற்று திருடி சென்று விட்டனர்.
இந்தப் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர்.
- வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லாவண்யா. தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவர் இன்று காலை கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கம் செல்லும் சாலையை அடுத்து தூர் வாசகர் முனிவர் கோவில் அருகில் இயற்கை உபாதையை கழிக்க சாலையின் ஓரமாக இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார்.
இருளில் மறைந்திருந்த ஒருவர் அவரை கத்தியால் தாக்கி நகைகளை பறிக்க முயற்சித்தார். இதனைக்கண்டு லாவண்யா கூச்சலிட்டார்.
காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர். கொள்ளையனிடமிருந்து லாவண்யாவை மீட்டனர்.
கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் திருக்கோவிலூரை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. அவர் போலி சாமியாராக வலம் வருவது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும்.
கிரிவலப்பாதையில் கடந்த சில தினங்களாகவே சாதுக்கள் போர்வையில் ஆன்மீக பக்தர்களை மிரட்டுவதும், தாக்குவதும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
உண்மையான சாதுக்கள் யார் என்று அறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதுடன் போலி சாமியார்களை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- பாதசாரிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் அபாயம்
- 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதாக புகார்
திருவண்ணாமலை:
போக்குவரத்து தடங்களின் முதன்மையானது சாலை போக்குவரத்து. மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச்சென்று வருவதற்கு பெரிதும் துணையாக இருப்பது சாலை போக்குவரத்தே.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் கவனிப்பாரின்றி இருப்பது அப்பகுதி மக்களையும், சமூக ஆர்வலர்களையும் வேதனையடையச் செய்துள்ளது.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சி, கிருஷ்ணாவரம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 1200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களின் போக்குவரத்துக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த தார் சாலை தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்காற்ற நிலையில் கிடக்கும் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாருக்கேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு வாகனங்களில் அழைத்துச்செல்லும்போது, மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சேதமடைந்த இந்தச் சாலையை தவிர கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் சென்று வர மாற்றுச் சாலை எதுவும்
இல்லை. அதேபோல் சாலை ஓரம் முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்து கிடப்பதால் இரவு நேரங்களில் பாம்பு விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உள்ளது.
நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு சாலைகள் மோசமாக உள்ள நிலையில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகின்றன. மருத்துவமனை செல்லும் நோயாளிகள் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் கரடு முரடான சாலையில் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அவசர நேரத்தில் செல்லும்போது வாகனங்கள் பஞ்சர் ஆகி நடு வழியில் நின்று விடுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அரசு பள்ளி மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் இல்லை. நாங்கள் ரேஷன் உள்ளிட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு பழுதடைந்துள்ள இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். பஸ் போக்குவரத்து இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் நடந்துதான் வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு சென்று, அங்கிருந்து பஸ் மூலம் செல்கின்றனர். இரவு நேரத்தில் சாலையில் நடந்து வருபவர்கள் பாதுகாப்பிற்காக தெருவிளக்குகள் கூட அமைக்கப்படவில்லை.
இரவு நேரத்தில் குண்டு குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.
பழுதடைந்து கிடக்கும் இந்த சாலையை சீரமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கலெக்டர் தகவல்
- 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும்
திருவண்ணாமலை:
இந்திய விமானப்படையில் அக்னிவீரவாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜூலை மாதம் 27 முதல் ஆகஸ்டு 17 வரையில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப்படையில் அக்னிவீரவாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு 27.06.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ்ஆ ட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது Instrumentation Technoloy / Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக COBSE உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 சென்டி மீட்டர் ஆண்களும் 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ.250 ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு இணைய வங்கி மூலமாக பணம் செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக பொதுஅறிவு. மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவர்கள்.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பைப் பார்த்து, தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யாறு ஒன்றியம் விண்ணவாடி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை, கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை ஆகியன அமைக்கப்பட்டு இருந்தன.
அதேப் போல அரும்பருத்திக் கிராமத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடைக் கட்டடமும் கட்டப்பட்டது. இவைகளின் திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமைத் தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றியக் கவுன்சிலர் வி.ஏ.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு இரண்டு தார்சாலை மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்யாறு கல்வி மாவட்டம் பள்ளி அரசு மேநிலைப் பள்ளியில் 63 மாணவர்களுக்கும், நெடும்பிறை அரசு பயிலும் மாணவர்கள் 45 என மொத்தம் 108 பேருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிள் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் கே.மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், தீபா ராபர்ட், நகர மன்ற உறுப்பினர்கள் ரவி, பேபி ராணி பாபு, திமுக நிர்வாகிகள் அன்பழகன், மா.கி வெங்கடேசன், ஜே.ஜே. ஆறுமுகம், சுந்தரேசன், பார்த்தீபன் தயாளன், அருள், சக்திவேல், துரை, கருணாநிதி, பா.க. மணிவ ண்ணன், அசோக், மங்கலம் பாபு, தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
- வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்த வர்கள் அரவிந்தன் (வயது 19), இவரது நண்பர்கள் கோகுலகிருஷ்ணன் (19), சாய் பூசன் (19).
இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் பிரம்மதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வெம்பாக்கம் பொம்மாத்தான் கோவில் அருகே புத்தனூரை சேர்ந்த மோகன் (37), சரவணன் (45), ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை மோகனம், சரவணனும் வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் வாலிபர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அரவிந்தனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பாபு என்பவர் என் வாலிபர்களை தாக்குகிறாய் என்று கூறி தகராறு தடுத்து நிறுத்தி உள்ளார்.
இதையடுத்து படுகாயம் அடைந்த அரவிந்தனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன், சரவணனை கைது செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.