என் மலர்
திருவண்ணாமலை
- ஆம்புலன்சில் மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் பஸ்கள் பாதி வழியிலேயே திரும்பி செல்வதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லும் நிலை உள்ளது.
இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் கூடுதல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அல்லது தச்சூர் வட்டார மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நலன் கருதி குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்.இவர் செங்கம் பகுதியில் யாசகம் செய்து வரும் திருநங்கை ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் வாலிபர் விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்தார். அப்போது அந்த திருநங்கையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது திருநங்கையின் தோழி திருநங்கைகள் 4 பேர் வந்தனர். அவர்கள் கஞ்சா போதையில் தொந்தரவு செய்த விக்னேஷை உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்தனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் கஞ்சா வாலிபரை புதிய பஸ்நிலையத்தில் சுற்றி சுற்றி திருநங்கைகள் கட்டைகளால் தாக்கியதில் வாலிபர் நிலை குலைந்து போனார்.
சம்பவம் நடந்து கொண்டிருந்த புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெண் காவலர் உட்பட காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருநங்கைகளிடமிருந்து வாலிபர் விக்னேஷை மீட்டு அழைத்துச் சென்றனர்.
மேலும் இந்த சம்பவத்தால் பேருந்துக்காக காத்திருந்தோர் உள்பட பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். வாலிபரை தாக்கியது மட்டுமல்லாமல் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகளை காவல்துறையினர் செங்கம் பகுதியில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் செங்கம் பகுதியில் யாசகம் கேட்டு வரும் திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10-அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்
- 250-க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 10-அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் என 20-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
19-வது நாளாக நேற்று 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மாடுகளிடம் மனு அளித்து போராட்டம் செய்தனர். மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கின்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் நாகப்பட்டினம் தமிழ்செல்வன், டெல்டா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வேதாரண்யம் பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டு 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனதமிழக அரசை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில், இயற்கை வேளாண்மை விவசாயிகள் கீழ்பென்னாத்தூர் கோதண்டராமன், சமூக ஆர்வலர்கள் ராஜாதோப்பு பலராமன், கனகராஜ், கார்த்திகேயன், சகாதேவன், கோவிந்தன், அர்ச்சுனன், கணியாம்பூண்டி வரதராஜன், மகளிர் அணி நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் காமராஜ்நகர் சதாசிவம், அசோக்குமார், நாரியமங்கலம் க.சா.முருகன் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து இன்று (20-வது நாளாக) போராட்டம் நடைபெற்றது.
- வேர்ப்புழு தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
- பயிர் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்,
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த தலையாம் பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
இதேபோல் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் கரும்பு மற்றும் வாழைத்தான் அதிகம் பயிரிடப்படுகிறது.
12 மாதம் வளரும் இந்த கரும்பு பயிர்கள் வேர்ப்புழு தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் வாடத் தொடங்கி தற்போது கரும்புகள் காய்ந்துபோனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தலையாம்பள்ளம் கிராமத்தில் பயிரிட்டுள்ள கரும்பு நிலத்தில் வேர் புழுக்கள் உருவாகி உள்ளது. கரும்பின் வேர்களை புழுக்கள் துளையிட்டு முற்றிலும் நாசம் செய்து விடுகின்றன.
இதனால் கரும்பு வாடி, வதங்கி முற்றிலும் காய்ந்து விட்டன.
அனைத்து வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டும் கூட புழுக்கள் சாகவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதோடு, நஷ்ட ஈடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
- பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் பரஞ்சோதி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மேலும் ஸ்ரீ பரஞ்சோதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பரஞ்சோதி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இது தொடர்ந்து ஸ்ரீ பரஞ்சோதி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இந்த திருவிழாவில் முன்னாள் எம் பி மு. துரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.முனுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் தங்கம் செ. சீ மணி,வ. மணி,விழா குழுவினர்கள் எஸ் பி வரதன், ஜேசிபி ராஜா,நா. செல்வம்,வி கோபி,சீனு, தாண்டவராயன், விவேக்,முனிசில், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என வலியுறுத்தல்
- பொதுமக்கள் கோரிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
பேருராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நபர்களுக்கு பிளாஸ்டிக் கவர்களையே கடை உரிமையாளர்கள் வழங்குகின்றனர்.
இதனால் கண்ணமங்கலம் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாரத் நெட் திட்டம்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணையதள இணைப்பு வழங்கும் பணி. முழு வீச்சில் நடைபெற்று வரும் இணையதள இணைப்பு வழங்கும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும். மாவட்டத்தல் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்கள், 860 கிராம ஊராட்சிகள் ஆகியவை ஆப்டிகல் பைபர் எனப்படும் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட உள்ளது.
கண்ணாடி இழைகள் தரைவழியாகவும், மின்சார கம்பங்கள் வழியாகவும் கொண்டு செல்லப்படும். இதற்கான உபகரணங்கள் கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகள் ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது அனைத்து கிராம ஊராட்சியும் இணைய வசதி பெறும். கிராம ஊராட்சிகளில் இணைய தள வசதிக்காக அமைக்கப்படும் மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர் மற்றும் கண்ணாடி இழை ஆகியவை அரசின் உடைமையாகும்.
இதை சேதப்படுத்துபவர்கள் மற்றும் திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வருவாய் இழப்பை ஈடு செய்ய நிர்வாகம் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளது
- எதிர்ப்பு கிளம்பியதால் வசூலை நிறுத்தி வைக்க முடிவு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
மேலும் வெளிநாட்டு பக்தர்களும் சாமியை தரிசிக்கின்றனர்.இங்கு பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டணம் பெற்று சாமி தரிசனம் நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவிலில் பவுர்ணமி நாளில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த மாதம் அறிவித்தார்.
அவரது உத்தரவை மீறி,ஆனி மாத பவுர்ணமி நாளான கடந்த ஜூலை 1-ந் தேதி மாலை வரை பக்தர்களிடம் கட்டண தரிசனத்துக்காக ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதற்கு, பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தியது.
சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ததால் ஆண்டுதோறும் கிடைத்து வந்த ரூ.1.32 கோடி வருவாய் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வருவாய் இழப்பை ஈடு செய்ய இந்து சமய அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், "காணிக்கை வரவு" என்ற பெயரில் ஒரு நபருக்கு ரூ.500 வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி காணிக்கை வரவு கட்டண வசூல் கடந்த ஓரிரு நாட்களாக முழு வீச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.500 செலுத்தியவர்களை வி.ஐ.பி கள் பாதையில் அழைத்து சென்று சாமியை எளிதாக தரிசனம் செய்ய கோவில் ஊழியர்கள் உதவி புரிந்துள்ளனர்.ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து அவர்களிடம் திட்டத்தின் நோக்கத்தை அவர்களது மொழியிலே எடுத்துரைத்து கோவில் நிர்வாகம் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் காணிக்கை வரவு திட்டத்தில் பணத்தை செலுத்தி சாமியை விரைவாக தரிசனம் செய்துள்ளனர்.
இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த காணிக்கை வரவு வசூல் அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை என சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது; வருவாய் இழப்பை ஈடு செய்ய காணிக்கை என்ற பெயரில் ரூ.500 வசூலிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் காணிக்கை வரவு வசூலிப்பது நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்
- சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
- பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
வந்தவாசி :
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சாமி அய்யப்பன். இவரது அக்காள், கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். அக்காளின் குழந்தைகள் 3 பேருக்கு காதணி விழா வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதையடுத்து சாமி அய்யப்பன் தனது அக்காள் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
மேலும் பின்னால் மேளதாளங்களுடன் டிராக்டர் டிரெய்லரில் 3 குழந்தைகளை அமர வைத்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.
- பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர்.
திருவண்ணாமலை:
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம்.
அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முன்பு வழிபட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற இளம் பெண் அதிகாலை உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.
இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர்.
- செங்கத்தில் தொடர் விபத்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- போக்குவரத்து பாதிப்பு
செங்கம்:
செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கல்லூரி மாணவி சைக்கிளில் பக்கிரி பாளையம் கூட்ரோடு பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ஆம்னி கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் மாணவியை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உயர் கோபுரம் மின் விளக்குகள் தெரியாததால் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் திருவண்ணா மலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் பொதும க்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறியதை யடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதும க்கள் கலைந்து சென்றனர்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சாலை மறிய லால் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.
- மிளகாய் பொடி தூவி சென்ற கும்பலுக்கு வலை வீச்சு
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் பழமைவாய்ந்த 'பூண்டி பொன்னெழில்நாதர் ஜீனாலயம் உள்ளது.
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
இக்கோவில் தலைவராக அப்பாண்டை ராஜ், செயலாளராக நேமிராஜன், பொருளாளராக அசோக்குமார் உள்ளனர். தினசரி கோவிலில் பூஜை முடிந்த பிறகு இரவு நடையை சாத்திவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று இரவு பொருளாளர் அசோக்குமார் கோவில் கதவை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்த 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 1½ அடி உயரமுள்ள அனந்ததீர்த்தங்கரர் உள்பட 7 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மோப்ப நாய் தங்களை கண்டுபிடிக்காமல் இருக்க, கோவில் முழுவதும் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவலாளி நேற்று காலை கோவில் நடையை திறக்க சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் நிர்வாகிகளுக்கும், தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
தடயங்கள் சேகரிப்பு
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் , இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் உட்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை குறித்து கோவில் நிர்வாகிகள் புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.