என் மலர்
திருவண்ணாமலை
- இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது
- 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் காவல்துறை தயார் நிலையில் இருந்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது.
இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது.
சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளை களை, பார்வை யாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.
- சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு
- போலீசார் பேச்சுவார்த்தை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மகளுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே தனது மகளை சிகிச்கைக்காக, தியாகராஜன் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.
ஆஸ்பத்திரியில் அவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர், சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை வலி தாங்கமுடியாமல் துடித்தார். டாக்டரிடம் தியாகராஜன் சென்று கேட்டதற்கு, அவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் தனது மகளுடன், அரசு ஆஸ்பத்திரி முன்பு வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து அவர் தனது மகளை அழைத்துக்கொண்டு, வேறு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் டாக்டர்களை கண்டித்து, தி.மு.க பிரமுகர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 44) விவசாயி. இவர் நேற்று இரவு செங்கத்திலிருந்து முன்னூர் மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். குயிலம் கூட்ரோடு அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வந்த மினி வேன் குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக உரசியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
- வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது
ஆரணி:
வேலூர் மாவட்டம் அடுக்கம் பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகள் 21 வயது இளம்பெண். இவர், கல்லூரி முடித்து விட்டு போலீஸ் வேலைக் காக படித்து வருகிறார்.
ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்த மாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம் பெண்ணுடன் ஆகா ஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனால், இளம்பெண்ணை திரும ணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவருடன் ஆகாஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், இளம்பெண் கர்ப்பமானார். ஆகாஷ் தனது வீட் டிற்கு தெரிந்தால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அதனால், உடனடியாக கருவை கலைத்துவிட லாம். பின்னர் பெற்றோரிடம் கூறி அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து மாணவியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்துள்ளார்.
மேலும், சில மாதங் களுக்கு முன்பு அந்தபெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். பல காரணங்கள் கூறி திருமணம் செய்து " கொள்ளாமல் ஆகாஷ் அலைக்கழித்துள்ளார்".
ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஆரணியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் ஆகாஷுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற் பட்டு அவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முதல் காதலி பிளஸ் 2 மாணவியை தொடர்பு கொண்டு, ஆகாஷ் அவரை ஏமாற்றியது குறித்து தெரி வித்துள்ளார்.
இதனால், அந்த மாணவி ஆகாஷின் முதல் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவருடன் இருந்த பழக்கத்தை நிறுத் திக் கொண்டார். இதனால், ஆகாஷ் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது, தன்னை காத லிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி பள்ளிக்கு சென் றபோது, ஆகாஷ் மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆரணி, கண்ணமங்கலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாண வியும், இளம்பெண்ணும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை மகளிர் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியதுடன் பள்ளி மாணவியிடமும் அத்துமீ றியது தெரியவந்தது.
இதையடுத்து மகளிர் போலீசார் ஆகாஷை போக்சோ சட் டத்தில் கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உடல் நல குறைவால் அவதி பட்டார்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே கங்கை சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி அமுதா (வயது 30). இவர் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குண மாகவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மனவேதனை யில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது நிலத் துக்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
பின்னர் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச் சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். துகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 வாரங்கள் விழா நடைபெற உள்ளது
- உதவி கலெக்டர் ஆய்வு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம்அடுத்த படவேடு பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 21-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ந் தேதி வரை 7 வாரங்களுக்கு ஆடி வெள்ளி விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு செய்யப்பட உள்ள பணிகள் குறித்து ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி நேற்று 14-ந் தேதி படவேடு பகுதியைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.
அப்போது போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், கோயில் மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- ரோந்துப் பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற் றும் போலீசார் நேற்று அதிகாலை வந்தவாசி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமய் யர் தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்த முயன்றனர். அவர் மோட்டார் சைக்கிளை ரோட்டிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் தப்பி ஓடியவர் பொட்டிநாயுடு தெருவில் இருந்து மோட்டார்சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீ சார் வந்தவாசி 5 கண் பாலம் அருகில் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த திலீப் (வயது 23) என்பது தெரி யவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.
- 50 கிராம் கஞ்சா பறிமுதல்
- வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
செய்யாறு:
செய்யாற்று பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை நடப்பதாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது பாலத்தின் கீழ் நின்றிருந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். வாலிபர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செய்யாறு பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 22), பிரவீன் (20), என்பதும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த எக்னேஷ் (20). என்பதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போக்சோவில் வழக்கு பதிவு
- போலீசார் தலைமறைவானவரை தேடி வருகின்றனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த மேல் நெமிலி சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 22). இவர் பெங்களூருவில் புதிய கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.
ஆசை வார்த்தை
அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டிலிருந்து வந்தார். வாலிபரும், சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரண்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பெற்றோர் அவரை வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தேடி வருகின்றனர்.
- 3 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்று பணி வழங்குவதால் சிரமம்
- போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றனர்
ஆரணி:
சேத்துப்பட்டு அடுத்த பிலாந்தி கிராம மக்கள் 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
400-க்கும் மேற்பட்டோரை 3 பிரிவுகளாக பிரித்து 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 3 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்று பணி வழங்குவதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதேபோல் இன்று காலை 100 நாள் திட்டத்திற்கு வந்தபோது வெகுதூரம் அழைத்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஆரணி -வந்தவாசி பில்லாந்தி கூட்ரோட்டில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரணமல்லூர் போலீசார் விரைந்து சென்றனர்.
மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- டிராக்டர்களுடன் பேரணி
- 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொடர்ந்து 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் கடந்த - 5-ந்தேதி முதல் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக விவசாயிகள் 250-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் 9-வது நாளான நேற்று 250-க்கும் மேற்பட்டவிவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 35-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் வரை சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கி்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
இந்த போராட்டத்தில் , இயற்கை வேளாண்மை விவசாயிகள் கீழ்பென்னாத்தூர் கோதண்டராமன், சிறுநாத்தூர் கிருஷ்ணன், சமூக ஆர்வலர்கள் ராஜாதோப்பு பலராமன், கனகராஜ், கார்த்திகேயன், சகாதேவன், கோவிந்தன், அர்ச்சுனன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணராஜ் (எ) குமார், அண்ணாநகர் சண்முகம், சுரேஷ், இந்திராநகர் சண்முகம், கணியாம்பூண்டி வரதராஜன், மகளிர் அணி நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் கீக்களூர் சுந்தரமூர்த்தி, சிறுநாத்தூர் பரந்தாமன், உதயகுமார், சுப்பிரமணியன், காமராஜ்நகர் சதாசிவம், அசோக்குமார், நாரியமங்கலம் க.சா.முருகன் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்
- அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கூட்டம் அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம், துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒன்றிய வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, அனுராதாசுகுமார், பாரதி, மணிமேகலை சேகர், புஷ்பா சதாசிவம், மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போது பெய்துவரும் மழைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் சுகாதாரத்தை சீர் கெடாமல் பாதுகாக்கும் நோக்கில், ஒன்றியத்திற்கு தேவை அடிப்படை வசதிகளை உடனடியாக விரைந்து செயல்படுத்திடவேண்டும் எனவும், கீழ்பென்னாத்தூர் தாலுக்காவாக உருவாகி பல வருடங்கள் ஆகியும் சார் கருவூலம் இன்றுவரை அமைக்கப்படாமல் உள்ளது.
பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக கருவூலம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியும் விவாதித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.