search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வாக்காளர்கள் ஆர்வமாக காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளுக்கும், ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

    Live Updates

    • 18 Sep 2024 3:41 AM GMT

      ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷகுன் பரிஹார் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர்.

      பாஜக உறுதியாக வெற்றி பெறும். பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சனை. பாஜக பயங்கரவாதத்தை குறைத்துள்ளது. பிடிபி, தேசிய மாநாடு கட்சிகள் எப்போதும் சமூகத்தை துண்டாக்க முயற்சி செய்கின்றன. விரைவில் பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் ஆகும்" என்றார்.

    • 18 Sep 2024 2:52 AM GMT

      ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான வாக்களார்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தும்படி அழைப்பு விடுக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • 18 Sep 2024 2:38 AM GMT

      பனிஹால் தொகுதி பாஜக வேட்பாளர் முகமது சலீம் பாட் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "எனக்கு மகிழ்ச்சி. தேர்தலை நடத்தியதற்காக பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் இங்கு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றார்

    • 18 Sep 2024 2:14 AM GMT

      புல்வாமாவில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்


    • 18 Sep 2024 2:12 AM GMT

      குல்காமில் பெண்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி



    • 18 Sep 2024 1:51 AM GMT

      புல்வாமாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி.

    Next Story
    ×