என் மலர்
இந்தியா

பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்

- தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது.
- பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.
Live Updates
- 4 Jun 2024 9:52 PM IST
விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:48 PM IST
திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 4,72,739 வாக்குகள் பெற்று 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:45 PM IST
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:43 PM IST
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:40 PM IST
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:34 PM IST
நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 4,65,044 வாக்குகள் பெற்று 208957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:18 PM IST
காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:14 PM IST
சென்னை செண்ட்ரல் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகள் பெற்று 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 4 Jun 2024 9:04 PM IST
மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. இந்த பாசத்திற்காக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என உறுதி அளிக்கிறேன்.
- 4 Jun 2024 8:54 PM IST
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.