search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்

    • தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது.
    • பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

    நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.


    Live Updates

    • 4 Jun 2024 8:52 PM IST

      கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

       

    • 4 Jun 2024 8:50 PM IST

      நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

       

    • 4 Jun 2024 8:48 PM IST

      தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

       

    • 4 Jun 2024 8:31 PM IST

      திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றிச் சான்றிதழை பெற்றார்.

       

    • 4 Jun 2024 8:30 PM IST

      ஆந்திர தேர்தலில் பெரு வெற்றி பெற்ற பவர் ஸ்டார் பவன்கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.



       


    • 4 Jun 2024 8:25 PM IST

      இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

       

    • 4 Jun 2024 8:23 PM IST

      கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.

       

    • 4 Jun 2024 8:22 PM IST

      வேலூர் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.

       

    • 4 Jun 2024 7:32 PM IST

      இந்தியாவை ஆட்சி செய்ய 3-வது முறையாக மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளாதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

       

    • 4 Jun 2024 6:57 PM IST

      பனாஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெனிபென் தாகூர் வெற்றி. குஜராத் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் முதல் எம்.பி.யை பெற்றுள்ளது. 2014,2019 தேர்தல்களில் குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்ற நிலையில், இம்முறை ஒரு தொகுதியை காங்கிரசிடம் இழந்துள்ளது.


    Next Story
    ×