search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்

    • தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது.
    • பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

    நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.


    Live Updates

    • 4 Jun 2024 6:40 PM IST

      மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

       

    • 4 Jun 2024 6:25 PM IST

      ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு வெற்றி பெற்றுள்ளார்.

       

    • 4 Jun 2024 6:22 PM IST

      பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம். மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது என மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

       

    • 4 Jun 2024 6:16 PM IST

      நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தோல்வியடைந்தார்.

       

    • 4 Jun 2024 6:10 PM IST

      2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட NOTA-வுக்கு முதல் முறையாக அதிக வாக்குகள் பதிவாகி சாதனை. ம.பி.யின் இந்தூர் தொகுதியில் சுமார் 2.18 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்ததால், NOTAவுக்கு வாக்கு சேகரித்தது காங்கிரஸ்.

       

    • 4 Jun 2024 6:08 PM IST

      தருமபுரி மக்களவைத் தொகுதியில் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் ஆ.மணி.

    • 4 Jun 2024 6:06 PM IST

      மக்களவை தேர்தலில் வெற்றிமுகம் கண்ட திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



       


    • 4 Jun 2024 5:58 PM IST

      ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

       

    • 4 Jun 2024 5:57 PM IST

      பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் டெபாசிட் இழந்து பரிதாப தோல்வி. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை விட 4,20,941 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் நின்று 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், தற்போது அதே வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

    • 4 Jun 2024 5:55 PM IST

      ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக களமிறங்கிய ஓ.பன்னீர் செல்வம் தோல்வியடைந்தார்.



       


    Next Story
    ×