search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்

    • தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது.
    • பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

    நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.


    Live Updates

    • 4 Jun 2024 5:54 PM IST

      உத்திரப் பிரதேசத்தில் தனித்துப்போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

       

    • 4 Jun 2024 5:43 PM IST

      மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட நடிகையும், பாஜக வேட்பாளருமான நவனீத் ரவி ராணா தோல்வி முகம். ஜெய் ஸ்ரீராம் சொல்ல முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என பிரசாரம் செய்து சர்ச்சையில் சிக்கியவர்.


    • 4 Jun 2024 5:39 PM IST

      அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தோல்வி. சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி.

    • 4 Jun 2024 5:33 PM IST

      குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்ட அமித்ஷா 10,10,972 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

       

    • 4 Jun 2024 5:20 PM IST

      வாரணாசியில் பாஜக வேட்பாளர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1,52513 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.



       


    • 4 Jun 2024 5:14 PM IST

      பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி வெற்றி.

       

    • 4 Jun 2024 5:12 PM IST

      மேற்குவங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி.

       மாநில காங்கிரஸ் தலைவரும் 25 ஆண்டுகளாக அத்தொகுதியில் எம்பியாக இருந்தவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தினார்.

    • 4 Jun 2024 5:09 PM IST

      வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகானை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 11 சுற்றுகள் முடிவில் NOTAவுக்கு 4,712 வாக்குகளும், நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1,583 வாக்குகளும் பதிவு.

       

    • 4 Jun 2024 5:00 PM IST

      விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் 60% வாக்குகளுடன் வெற்றி முகத்தில் உள்ளார்.அதிமுகவை நான்காவது இடத்திற்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி

    • 4 Jun 2024 4:55 PM IST

      திருவனந்தபுரம் தொகுதியில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை வீழ்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றி. 4-வது முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பியாக தேர்வாகிறார்.

    Next Story
    ×