search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. லைவ் அப்டேட்ஸ்

    • தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது.
    • பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

    நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.


    Live Updates

    • 4 Jun 2024 4:52 PM IST

      புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 71,698 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பின்னடைவு.

    • 4 Jun 2024 4:46 PM IST

      திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி. 6,16,559 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    • 4 Jun 2024 4:46 PM IST

      தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7-வது முறையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

       

    • 4 Jun 2024 4:43 PM IST

      தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி.

    • 4 Jun 2024 4:43 PM IST

      2 -வது முறையாக மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி.

       

    • 4 Jun 2024 4:38 PM IST

      கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

       

    • 4 Jun 2024 4:30 PM IST

      தனது தேர்தல் கணிப்பு தவறானதால் டிவி நேரலையிலேயே அழுத, ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் குப்தா.

    • 4 Jun 2024 4:27 PM IST

      விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 11 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார். 

       

    • 4 Jun 2024 4:15 PM IST

      மக்களவையில் தனிப்பெருமான்மையை இழந்துள்ளதால் மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

      400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய மோடி 300 இடங்களை வரை கூட வெல்லமுடியவில்லை. 

       

    • 4 Jun 2024 4:11 PM IST

      ஆந்திராவில் ஆட்சியை பிடித்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு.

    Next Story
    ×