என் மலர்
கிரிக்கெட் (Cricket)
இது தான் கர்மா.. 'கோமாளி கோலி' என மீண்டும் விமர்சித்த ஆஸ்திரேலிய பத்திரிகை
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதான இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாகினார். அவர் மீது விராட் கோலி மோதலில் ஈடுபட்டார். அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது.
இந்நிலையில், தங்களுடைய நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய விராட் கோலியை மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிகை முகப்பு பக்கத்தில் கோமாளியை போல் சித்தரித்து மோசமாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில், விராட் கோலியை கிண்டலடித்து மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிகை மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதற்கு "கர்மா: கோமாளி கோலியின் மோசமான நாள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்ததையும் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்ததன் மூலமாகவும் கோலிக்கு இது ஒரு மோசமான நாளாக அமைந்தது என்று அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The back page of tomorrow's The West Australian. ????????@TheWestSport @westaustralian pic.twitter.com/MrE7H7E2ul
— Jakeb Waddell (@JakebWaddell) December 27, 2024