என் மலர்
ஐ.பி.எல்.

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்

- முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த குஜராத் அணி 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 57 பந்தில் 92 ரன்கள் குவித்தார். ஷபாலி வர்மா 40 ரன்னில் அவுட்டானார்.
குஜராத் அணி சார்பில் மேக்னா சிங் 3 விக்கெட்டும், டாட்டின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. பெத் மூனி 44 ரன்னிலும், ஆஷிஷ் கார்ட்னர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஹர்லீன் தியோல் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், குஜராத் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 4வது வெற்றி ஆகும்.