search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
    X

    முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

    • கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது
    • இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னம், வங்கி அதிகாரிகளின் கடவுச்சொற்களை (PASSWORD) பயன்படுத்திக் கடந்த 2013-ம் ஆண்டு மோசடி செய்துள்ளார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவும் அதே வங்கியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×