என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
ஒரே ஓவரில் 3 விக்கெட்: இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த சாகிப் மகமூது
Byமாலை மலர்31 Jan 2025 7:45 PM IST
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் இந்தியாவின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது ஓவரை சாகிப் மகமூது வீசினார். முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் திலக் வர்மா கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். ஹாட்ரிக் முயற்சியை தடுத்த சூர்யகுமார் யாதவ், 6-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இப்படி ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் இந்தியாவின் முன்னணி வீரர்களை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் சாகிப் மகமூது.
Next Story
×
X