search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்த முறை கப் நமதே.. மகா கும்பமேளா புனித நீரில் நனைந்த ஆர்சிபி ஜெர்சி.. ரசிகர் பரவசம் - வீடியோ
    X

    இந்த முறை கப் நமதே.. மகா கும்பமேளா புனித நீரில் நனைந்த ஆர்சிபி ஜெர்சி.. ரசிகர் பரவசம் - வீடியோ

    • 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா
    • 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற டி20 தொடராக இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது.

    இதுவரை பல அணிகள் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள நிலையில், பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் பெங்களூரு அணி வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, எதிரணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வெற்றிகனியை மட்டும் ஆர்சிபியால் எட்டிப் பறிக்க முடியாமல் உள்ளது.

    இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியுடன் புனித நீராடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரின் ஏக்கத்தையும் தூண்டிவிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×