search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது.
    • இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடியுடன் மோதியது.

    இதில் இத்தாலி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சீனா ஓபன் தொடரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என இழந்த சின்னர், அதிரடியாக விளையாடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் வு யீபிங்குடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-5), 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்றது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-அமெரிக்காவின் மேடக் சாண்ட்ஸ், சோபியா கெனின் ஜோடியுடன் மோதியது.

    இதில் இத்தாலி ஜோடி 6-3, 1-6, 10-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி, தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடி உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீரர் அலெக்சன் மைக்கேல்சன் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-3) , 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் ஷாங் ஜங்செங் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் மோதினார்.

    இதில் முச்சோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த கோகோ காப், அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என கைப்பற்றி இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முச்சோவா, கோகோ காப் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரேசில் வீரர் தியாகோ செய்போத் உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-5, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதினார். இதில் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக், ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்-பேப்லோ கரீனோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி சிறப்பாக ஆடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை முச்சோவா 7-6 (7-5) என வென்றார். அதிரடியாக ஆடிய சபலென்கா 2வது செட்டை 6-2 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முச்சோவா 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ராமநாதன் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

    இதில் ராமநாதன் 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் ஷாங் உடன் மோதினார். இதில் 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் கோகோ காப், படோசாவை எதிர்கொள்கிறார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ×