என் மலர்
டென்னிஸ்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று முடிவடைந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை லூசியாவுடன் மோதினார்.
இதில் ஒசாகா முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை லூசியா 6-4 என வென்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஒசாகா 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
- இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் பெற்றார்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.
இதில் கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். இது இவரது 3வது பட்டம் ஆகும்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.
இதில் கேஸ்பர் ரூட் 1-6 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட ரூட் 6-1, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதுகிறார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் நாட்டின் தாமஸ் மசாக்குடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், 2வது செட்டை கைப்பற்றினார். 3வது செட்டை தாமஸ் வென்றார்.
இறுதியில், தாமஸ் மசாக் 6-4, 0-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹான்மேனுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இது இவரது 1100-வது வெற்றி ஆகும்.
இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- உலகத் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் வீரர் தனது ஜோடியை தேர்வு செய்ய முடியும்.
- போபண்ணா முதல் 10 இடத்திற்குள் இருப்பதால் தனது ஜோடியை அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. ரோகன் போபண்ணா ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகத் தலைவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.
44-வது வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை மற்றும் டென்னிஸ் விதிப்படி தரவரிசை 10-க்குள் இருக்கும் வீரர் தன்னுடன் விளையாடும் வீரரை தேர்வு செய்யலாம்.
அதன்படி இந்திய டென்னிஸ் வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி அல்லது யூகி பாம்ரி ஆகியோரில் ஒருவரை போபண்ணா தனது ஜோடியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.
இரண்டு பேர்களில் ஒருவரை தேர்வு செய்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் தெரிவிப்பார். அவர்கள் ஆலோசனை செய்து போபண்ணா பரிந்துரை செய்யும் நபரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.
தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
பாலாஜி காக்லியாரி சேலஞ்சர் போட்டியில் ஜெர்மன் பார்ட்னருடன் இணைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாம்ரி முனிச்சில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் பார்ட்னருடன் இணைந்து பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 ஜோடிகள் கலந்து கொள்ளும். ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடியை அனுப்ப முடியும்.
பிரெஞ்ச் ஓபன் முடிவடைந்த பிறகு, ஜூன் 10-ந்தேதி தரவரிசை முடிவு செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு ஜோடி சேர்ந்த விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயேஸ் உடன் இணைந்து விளையாட மறுத்துவிட்டனர். இதனால் விஷ்னு வர்தன் சேர்ந்து விளையாடினார்.
2018-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் சரியான ஜோடியை தரவில்லை என லியாண்டர் பயேஸ், ஆசிய போட்டியில் இருந்து வெளியேறினார்.
- ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர்.
- மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்துடன் பிரபல டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் - ரஃபேல் நடால் ஆகியோர் இணைந்து ரசிகர்களுடன் உரையாடுவதற்காக புதிய விளம்பர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர். அந்த இடத்தில் இருந்து இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய ரஃபேல் நடால், "இறுதியில் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். போட்டியின் இயக்குநர்கள், போட்டிகளில் பணிபுரிபவர்கள், ஊழியர்கள் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் என எல்லாரும் ஒரு டென்னிஸ் வீரரை விட நான் யார் என்பதை பற்றிய நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.ஏனென்றால், டென்னிஸ் வீரராக, பட்டங்கள், சாதனைகள் என்னிடம் உள்ளது. நான் கனவு கண்டதை விட அதிகமாக சாதித்தேன்" என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய ரோஜர் பெடரர், "நான் ஒரு டென்னிஸ் வீரராக மட்டும் நினைவில் கொள்ளப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டிற்கு என்ன கொடுத்தேன் மற்றும் விளையாட்டிற்கு பின்னால் ஒரு நபராக நினைவுகூரப்பட்டால், அது எனது விம்பிள்டன் வெற்றிகள் அல்லது அது எதுவாக இருந்தாலும், அது குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் ஒரு டென்னிஸ் வீரராக இருப்பதை விட ஆளுமையாக நினைவில் கொள்ள முடிந்தால், அது நன்றாக இருக்கும். நான் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தால், அது எனக்கும் மகிழ்ச்சியைத் தரும். மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 3-வது முறையாக ஸ்வியாடெக் இத்தாலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் இறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை போராடி வென்றார். இறுதியில் ஸ்வரேவ் 1-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதுகிறார்.
- களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
- பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அவர் 2வது செட்டை 5-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிட்சிபாஸ் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இறுதியில் சிட்சிபாஸ் 6-3, 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் நிக்கோலஸ் ஜாரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று அதிகாலை நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சபலென்கா மோதுகின்றனர்.