என் மலர்
டென்னிஸ்
- வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
நியூயார்க்:
டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரியாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் கோப்பை வென்று அசத்தினார்.
இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,416 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது.
போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,370 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (6,530 புள்ளி), இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும் (5,344), சீன வீராங்கனை ஹுயின்வென் ஜெங் 5வது இடத்திலும் (5,340) உள்ளனர்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 7-ம் இடம் பிடித்தவரும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார். இதில் ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அலகாரஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 1-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் 4ம் நிலை வீரரான ரஷியாவின் மெத்வதேவ், 5வது நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்தார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீராங்கனை கோகோ காப் கோப்பை வென்றார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார்.
இதில் கோகோ காப் 3-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பை வென்று அசத்தினார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதினார்.
இதில் குயின்வென் ஜெங் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரவு 9.45 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
இறுதிப்போட்டியில் கோகோ காப், குயின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதுகிறார்.
இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதுகிறார்.
நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என எளிதில் வென்றார்.
மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கிரெஜ்சிகோவா அமெரிக்காவின் கோகோ காப்பை 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
- பர்பிள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாங் கின்வென்- ஜாஸ்மின் பாவ்லினி மோதினர்.
- ஜாங் கின்வென் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
ரியாத்:
உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இதில் 'பர்பிள்' பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான ஜாங் கின்வென் (சீனா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) விரட்டியடித்து 2-வது வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
ஒரு வெற்றி, 2 தோல்வியை சந்தித்த ஜாஸ்மின் பாவ்லினி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா திடீரென விலகினார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற இருந்த போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா மோதுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக ஜெசிகா பெகுலா அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக கசட்கினா மாற்று வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 6-3 என சபலென்கா வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-1 என வென்றார்.
மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை 6-1, 6-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கோகோ காப்- இகா ஸ்வியாடெக் மோதினர்.
- இதில் வெற்றி பெற்ற கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
ரியாத்:
உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க 'இளம் புயல்' கோகோ காப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்கை (போலந்து) தோற்கடித்தார். 2-வது வெற்றியை சுவைத்த கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வெளியேற்றி, அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்தார்.