என் மலர்
டென்னிஸ்
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.
இதில் டி மினார் 7-6 (7-2) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கோபோலி விலகிக் கொண்டார். இதனால் டி மினார் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரியா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7) 4-6, 8-10 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ், இத்தாலியின் முசெட்டி உடன் மோதுகிறார்.
- கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.
- உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
வியன்னா ஓபன் 2024 தொடரின் முதல் போட்டியில் இத்தாலியை சேர்ந்த லூசியானோ டார்டெரியை டொமினிக் தீம் எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் டார்டெரி 7-6 (6), 6-2 என்ற கணக்கில் டொமினிக்-ஐ வீழ்த்தினார். 91 நிமிடங்கள் நீடித்த போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டொமினிக் தீம் அறிவித்தார்.
முன்னாள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்த டொமினிக் தீம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்று அசத்தினார். அதன்பிறகு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனோடு ஓய்வு பெறும் கட்டாயத்திற்கு டொமினிக் தள்ளப்பட்டார். அந்த வகையில், அவர் விளையாடிய கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.
ஓய்வு பெற்ற டொமினிக் தீம்-க்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த போட்டி வியன்னாவில் உள்ள ஸ்டட்ஹாலே அரீனாவில் நடைபெற்றது. போட்டிக்கு பிறகு பேசிய டொமினிக் தீம், "கடந்த சில மாதங்களில் பல அருமையான குட்-பைக்களை கடந்து வந்துள்ளேன், ஆனால் இன்று உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.
- 11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
- இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஜெய்ப்பூர் அணி அதிரடியாக ஆடியது. இறுதியில் இந்தப் போட்டியில் 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதுகிறார்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷிய வீராங்கனை ஆண்ட்ரிவா தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மீரா ஆண்ட்ரிவா, சக நாட்டு வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் கசட்கினா முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார். 2வது செட்டை ஆண்ட்ரிவா 6-4 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கசட்கினா 6-4 என வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் செக் வீராங்கனை முச்சோவா போட்டியில் இருந்து விலகினார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் மீரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் முச்சோவா முதல் செட்டை 2-6 என இழந்தார். 2வது செட்டில் 0-1 என இருந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஆண்ட்ரிவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் படோசா 4-6 என முதல் செட்டை இழந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, கசட்கினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனைகள் ஆண்ட்ரிவா, கசட்கினா மோதுகின்றனர்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் செக் வீராங்கனை முச்சோவா வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா உடன் மோதினார்.
இதில் படோசா 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் முச்சோவா 6-2, 6-1 என எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை வாங் ஜி யு உடன் மோதினார். இதில் படோசா முதல் செட்டை 6-7 (4-7)இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட படோசா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
- ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார்.
மகளிர் டென்னிஸ்ஸில் உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வென்றுள்ள செரீனா கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த மே மாதம் எனக்கு கட்டி இருப்பத கண்டுபிடித்தேன். எம்.ஆர்.ஐ. எடுத்ததில், அது நீர்க்கட்டி என்று தெரியவந்தது என தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "நானும் இன்னமும் உடல்நலம் தேறி வருகிறேன், சிறப்பாக உணர்கிறேன். எப்போதும் உடல்நலம் தான் முன்னுரிமை," என்று செரீனா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் நீர்க்கட்டி கண்டறியப்பட்டதும் அதனை அகற்றாமல் செரீனா வில்லியம்ஸ் ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார். எனினும், கட்டி ஓரளவுக்கு வளர்ந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதனை அகற்றியுள்ளார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சபலென்கா 6-3, 5-7, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அசத்தியுள்ளார்.