search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லைவ் அப்டேட்ஸ்:அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
    X

    லைவ் அப்டேட்ஸ்:அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

    • ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.


    Live Updates

    • 11 July 2022 12:01 PM IST

      என்னை கட்சியில் இருநது நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    • 11 July 2022 11:46 AM IST

      ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

    • 11 July 2022 11:29 AM IST

      அதிமுகவினரின் மோதல் சம்பவம் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை

    • 11 July 2022 11:09 AM IST

      ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என கே.பி.முனுசாமி பேசினார்.

    • 11 July 2022 11:08 AM IST

      பொருளாளர் பதவியில் உள்ள ஓபிஎஸ் கூட்டத்திற்கு வராத நிலையில், வரவு செலவு கணக்கை அமைப்பு செயலாளரான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். 

    • 11 July 2022 11:06 AM IST

      அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவி இனி பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை ஒருங்கிணைப்பாளர் இனி துணை பொதுச்செயலாளர் என மாற்றப்படுகிறது. பொதுச்செயலாளர் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமனம்.

    • 11 July 2022 10:43 AM IST

      அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். மேலும், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • 11 July 2022 10:39 AM IST

      இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • 11 July 2022 10:37 AM IST

      இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி நிர்வாகத்தை ஈபிஎஸ் நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.

      துணை பொதுச்செயலாளர்களை, பொதுச்செயலாளர் நியமனம் செய்வார் என்று தீர்மானம் நிறைவேற்றம்.

    • 11 July 2022 9:59 AM IST

      அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்

    Next Story
    ×