search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லைவ் அப்டேட்ஸ்:அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
    X

    லைவ் அப்டேட்ஸ்:அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

    • ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.


    Live Updates

    • 11 July 2022 9:41 AM IST

      அதிமுக எழுச்சி பெற ஒற்றை தலைமை தேவை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும், தேர்தல் அதிகாரியை நியமிக்கவும் தீர்மானம்

    • 11 July 2022 9:40 AM IST

      அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்து தீர்மானம்

    • 11 July 2022 9:32 AM IST

      அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிலையில், மீண்டும் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    • 11 July 2022 9:30 AM IST

      அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து செயற்குழு கூட்டம் நிறைவுபெற்றது.

    • 11 July 2022 9:20 AM IST

      பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    • 11 July 2022 9:19 AM IST

      தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் இருப்பதால் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • 11 July 2022 9:11 AM IST

      பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது.

    • 11 July 2022 9:06 AM IST

      பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது- நீதிமன்றம்

    • 11 July 2022 9:05 AM IST

      சட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம்- சென்னை உயர் நீதிமன்றம்

    • 11 July 2022 9:04 AM IST

      பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    Next Story
    ×