search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

    • நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    Live Updates

    • 15 March 2025 10:32 AM IST

      சுவை தாளிப்பு பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.11.47 கோடி நிதி ஒதுக்கீடு

    • 15 March 2025 10:32 AM IST

      பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.

    • 15 March 2025 10:31 AM IST

      முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் அமைக்கப்படும்.

    • 15 March 2025 10:31 AM IST

      சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு

    • 15 March 2025 10:30 AM IST

      மல்லிகை உற்பத்தியை அதிகரிக்க ரூ.1.6 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

    • 15 March 2025 10:29 AM IST

      நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 10:28 AM IST

      வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.

    • 15 March 2025 10:28 AM IST

      உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

    • 15 March 2025 10:27 AM IST

      மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.8.59 கோடி நிதி ஒதுக்கீடு

    • 15 March 2025 10:26 AM IST

      பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

    Next Story
    ×