என் மலர்
பிரான்ஸ்
- இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர் என்றார் அக்சல்சென்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
- இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- குத்துச்சண்டையில் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
- ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடந்தது.
- இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் லவ்லினா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சமனில் முடிந்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. ஹர்மன்பிரித் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.
அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், இந்திய அணி மொத்தம் 10 வீரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
- கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
- 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றபோது மூட்டுவலியால் அவதிப்பட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.
இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார். 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றிருந்தபோது மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதையடுத்து, கரோலினா மரின் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் சீன வீராங்கனை வென்றார்.
- குரோசியா வீராங்கனை வெகிக் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனா வீரங்கனை குயின்வென் ஜெங், குரோசியா வீராங்கனை வெகிக்குடன் மோதினார்.
இதில் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோசிய வீராங்கனை வெகிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
- காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதியில் போட்டியிட்ட அதே அணிகள்தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதி போட்டியில் மோதுவுள்ளன.
காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தையும், ஜெர்மனி அர்ஜென்டினாவையும், பெல்ஜியம் ஸ்பெயினையும், நெதர்லாந்து ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.
2020 டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
- தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.
தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.
பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமேன் கெலிஃப்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமேன் கெலிஃப்
ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்டனி அம்மிரட்டி பங்கேற்றார்.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்டனி அம்மிரட்டி பங்கேற்றார். அப்போது மேலே மாட்டப்பட்டிருந்த குச்சியில் அவரது அந்தரங்க உறுப்பு அடிபட்டு தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதன் மூலம் இப்போட்டியில் 12 ஆவது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்து விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வரலாகியுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால் கூட அவர் இந்த அளவிற்கு புகழ் பெற்றிருக்க மாட்டார் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் வீரர் ஹிரோகி ஒகிதாவும் இதே போன்று அடிபட்டு கீழே விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
- காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.
பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.
இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா ஜோடி வென்றது.
- இங்கிலாந்து ஜோடி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-ஜான் பீர்ஸ் ஜோடி, இங்கிலாந்தின் ராஜீவ் ராம்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆஸ்திரேலியா ஜோடி 6-7 (6-8), 7-6 (7-1), 10-8 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.
இதில் மேத்யூ எப்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.