search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • இந்திய வீரர் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
    • மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இன்று இரவு அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

    • நீச்சல் வீராங்கனையை ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறும்படி தெரிவித்தது.
    • பராகுவே வீராங்கனை அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த லுவானா அலோன்சோ என்ற நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இவர் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார்.

    இந்நிலையில், நீச்சல் வீராங்கனை அலோன்சோ ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி நாடு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அவர் தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்துவதாகவும், சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் தொடரின் கடைசிநாள் விழா வரை வீரர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவது வழக்கமாகும்.

    நாடு திரும்பிய நிலையில், பராகுவே வீராங்கனை அலோன்சா நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்திய வீரர் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
    • இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    இறுதியில், அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

    • வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் போட்டியிடுவார்.
    • இம்முறை 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் போட்டியிட்டார்.

    பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

    வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் போட்டியிடுவார். 2022 காமன்வெல்த் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் தங்கம் வென்றுள்ளார்.

    ஆனால் இம்முறை 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் போட்டியிட்டதால் வேறு வழியின்றி வினேஷ் போகத் தனது எடையை குறைத்து 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.

    வினேஷ் போகத் போட்டியிட்டு வந்த 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அன்திம் துருக்கி வீராங்கனை ஜெய்னெப் யெட்கில்-ஐ எதிர்கொண்டார். இந்த போட்டியில் 0-10 மிக மோசமான தோல்வியை தழுவினார் அன்திம். இப்போட்டியை வெறும் 101 நொடிகளில் துருக்கி வீராங்கனை வென்றார்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் அனுமதிச்சீட்டை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனை அன்திம் பாங்கலின் அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்துள்ளது.

    அன்டிம் பாங்கலின் அனுமதிச் சீட்டை அவரது சகோதரி முறைகேடாக பயன்படுத்திய புகாரில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை அன்திம் திரும்பப் பெறப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து உடனடியாக ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற அன்திமிற்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

    • வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
    • அவள் ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

    பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

    இதனையடுத்து, நடந்த இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனையை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தங்கம் வென்றார்.

    இந்நிலையில் வினேஷ் போகத் குறித்து தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் மனம்திறந்து பேசியுள்ளார்.

    "வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு தங்கம் கிடைத்து விட்டது என்று நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நான் இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனை குஸ்மான் உடன் மொத வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது நான் தங்கம் வெல்லவில்லை என்று நினைக்கும் போது எனக்கே விநோதமாக இருந்தது.

    உடல் எடையை குறைப்பதில் நானே கைதேர்ந்தவள் தான். அதே சமயம் வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அந்த நாள் அவளுக்கு ஒரு அற்புதமான நாளாக இருந்தது. அந்த நாளில் அவள் ஒரு பைத்தியக்காரத்தனமான சாதனையை செய்திருந்தாள்.

    ஆனால் அவளின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் அவளை நினைத்து அனுதாபப்படுகிறேன். நிச்சயமாக, அவள் ஒரு அற்புதமான போட்டியாளர், ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் மற்றும் நபர் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜிம்னாஸ்டிக் போட்டியில் சீன வீராங்கனை சோ யாக் வெள்ளி வென்றார்.
    • இத்தாலி வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போல் போஸ் கொடுத்தனர்.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆகஸ்ட் 6 அன்று நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இத்தாலி வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர். சீன வீராங்கனை சோ யாக் வெள்ளி வென்றார்.

    வெற்றிக்கு பின்பு வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அப்போது தங்கம், வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கடிப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

    அதனைப் பார்த்த சீன வீராங்கனை அதேபோல் க்யூட்டாக பதக்கங்களை கடிப்பது போல் போஸ் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

    இதனையடுத்து தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

    தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்திருந்த வினேஷ், தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • மீராபாய் சானு 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில் பங்கேற்றார்.
    • மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.

    அவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 புள்ளி கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார். 114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.

    இதே சுற்றில் பங்கேற்ற தாய்லாந்து வீராங்கனை மீராபாய் சானுவை விட ஒரு புள்ளி (200 புள்ளிகள்) அதிகமாக பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒருபுள்ளி வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.

    • 2022 காமன்வெல்த் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் தங்கம் வென்றுள்ளார்.
    • துருக்கி வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை அன்திம் 0-10 என்ற கணக்கில் தோல்வி

    பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

    வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் போட்டியிடுவார். 2022 காமன்வெல்த் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் தங்கம் வென்றுள்ளார்.

    ஆனால் இம்முறை 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் போட்டியிட்டதால் வேறு வழியின்றி வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.

    53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அன்திம் துருக்கி வீராங்கனை ஜெய்னெப் யெட்கில்-ஐ எதிர்கொண்டார். இந்த போட்டியில் 0-10 மிக மோசமான தோல்வியை தழுவினார் அன்திம். இப்போட்டியை வெறும் 101 நொடிகளில் துருக்கி வீராங்கனை வென்றார்.

    இப்போட்டியில் 53 கிலோ அளவுக்கு எடையை குறைக்க 48 மணிநேரம் அன்திம் பட்டினி கிடந்தார் என்றும் அதனால் ஏற்பட்ட சோர்வின் காரணமாகவே இந்த மோசமான தோவியை அவர் தழுவினார் என்றும் சொல்லப்படுகிறது.

    • உடல் எடை கூடி இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம்.
    • தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார்.

    இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர். தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இவரது மேல்முறையீட்டை ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்தது.

    இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். "அம்மா, மல்யுத்தம் எனக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கனவு எனது நம்பிக்கை அனைத்தும் உடைந்துவிட்டது. இனியும் என்னிடம் வலிமை இல்லை. குட்பை ரெஸ்ட்லிங் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். மன்னித்து விடுங்கள்," என்று வினேஷ் போகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம்.
    • இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர்.

    அப்போது, "இது விளையாட்டின் ஒரு பகுதி" என்று இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து இந்திய பயிற்சியாளர்கள் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் மல்யுத்தக் குழுவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. செய்தி வெளியான பிறகு வீராங்கனைகள் மிகவும் மோசமாக உணர்ந்தனர். நாங்கள் வினேஷைச் சந்தித்து ஆறுதல் கூற முயற்சித்தோம். அவள் தைரியமாக இருந்தாள்.

    அவர் எங்களிடம்," நாங்கள் பதக்கத்தைத் தவறவிட்டது கடினமான துரதிர்ஷ்டம். ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி" என்று கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஸ்பெயின் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
    • ஈகுவடார் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    பாரீஸ் ஒலிம்பிக்கின் தடகள போட்டியில் இன்று காலை கலப்பு அணிகள் பிரிவுக்கான மாரத்தான் நடை பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஜோடி கலந்து கொண்டது.

    மொத்தம் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயின் ஜோடி அல்வாரோ மார்ட்டின்- மரியா பெரேஸ் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.

    ஈகுவடாரின் பிரையன் டேனியல் பின்டாடோ- கிளென்டா மோர்ஜோன் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    ஆஸ்திரேலியாவின் ரிடியான் கவ்லே- ஜெமிமா மோன்டேஜ் ஜோடி 2 மணி நேரம் 51 நிமிடம் 38 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.

    இந்திய ஜோடி பந்தய தூரத்தை எட்ட முடியாமல் இடையிலேயே வெளியேறி கடைசி இடத்தை பிடித்தது. அதேபோல் செக்குடியரசு ஜோடியும் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறியது.

    ×