search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    vinesh phogat
    X

    வினேஷ் போகத் அற்புதமான போட்டியாளர் - தங்க பதக்கம் வென்ற வீராங்கனை புகழாரம்

    • வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
    • அவள் ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

    பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

    இதனையடுத்து, நடந்த இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனையை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தங்கம் வென்றார்.

    இந்நிலையில் வினேஷ் போகத் குறித்து தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் மனம்திறந்து பேசியுள்ளார்.

    "வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு தங்கம் கிடைத்து விட்டது என்று நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நான் இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனை குஸ்மான் உடன் மொத வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது நான் தங்கம் வெல்லவில்லை என்று நினைக்கும் போது எனக்கே விநோதமாக இருந்தது.

    உடல் எடையை குறைப்பதில் நானே கைதேர்ந்தவள் தான். அதே சமயம் வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அந்த நாள் அவளுக்கு ஒரு அற்புதமான நாளாக இருந்தது. அந்த நாளில் அவள் ஒரு பைத்தியக்காரத்தனமான சாதனையை செய்திருந்தாள்.

    ஆனால் அவளின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் அவளை நினைத்து அனுதாபப்படுகிறேன். நிச்சயமாக, அவள் ஒரு அற்புதமான போட்டியாளர், ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் மற்றும் நபர் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×