search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.
    • பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டது.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணி 52 ரன் வித்தியாசத்தில் எம்.ஐ. கேப்டவுனை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டது. பிரிட்டேரியா கேப்பிடல்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    இன்றைய போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பாரல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர்கிங்ஸ்-டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. கலர்ஸ் தமிழ் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 7.2 ஓவரில் 60 ரன்கள் எடுத்து வென்றது.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

    2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது.

    முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா திவாரி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.
    • இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

    இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. அறிமுக வீராங்கனையான அமன்ஜோட் கவூர் 30 பந்தில் 41 ரன் எடுத்தார். யாஸ்திகா பாட்டியா 35 ரன்னும், தீப்தி சர்மா 33 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களே எடுத்து முடிந்தது. இதனால் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், தேவிகா வைதியா 2 விக்கெட்டும், கைப்பற்றினர்.

    இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    • முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெடடுக்கு 127 ரன் எடுத்தது.
    • இன்று நடக்கும் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்- பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    6 அணிகள் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் பர்ல் ராயல்ஸ் அணியை ஈஸ்டர்ன் கேப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ஈஸ்டர்ன் கேப் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வென்றது.

    இன்று நடக்கும் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்- பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா அறிவித்துள்ளார்.
    • எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி பேட்டிங் பயிற்சியாளராக ஆம்லா பணியாற்றி வருகிறார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்கா வீரரான ஹசீம் ஆம்லா, எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா தற்போது அறிவித்துள்ளார்.

    ஹசீம் ஆம்லா தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 46.4 ஆகும். அதேபோல் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49.46 ஆகும். மேலும் , 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    2019 உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு கவுன்டி, டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார். கடந்த வருடம் கவுன்டி சாம்பியன்ஷிப்பை சர்ரே அணி வென்றது.

    • முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் திரிஷா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    பெனோனி:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்று இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை பெனோனி நகரில் எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் திரிஷா 57 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 33 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்வேதா 10 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய மகளிர் அணி துல்லியமாக பந்து வீசியது. மனாட் காஷ்யப் 4 விக்கெட்டும், அர்ச்சனா தேவி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதியில், ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர் முடிவில் 66 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

    • முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது.
    • ஷபாலி வர்மா மற்றும் ஸ்வேதா செராவத் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    பெனோனி:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்று இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பெனோனி நகரில் எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த யு.ஏ.இ. அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 78 ரன்கள் எடுத்தார். ஸ்வேதா செராவத் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷ் 49 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் களமிறங்கியது. தொடக்கம் முதல் இந்திய மகளிர் அணி கட்டுக்கோப்பாக பந்து வீசியது.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் மோதுகிறது.

    • பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    பெனோனி:

    ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவின் பெனோனி, போட்செப்ஸ்ட்ரூம் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இதில் களம் காணும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, ஜிம்பாப்வே, 'சி' பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மொத்தம் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். இவை சூப்பர் சிக்சில் தலா 6 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு மல்லுக்கட்டும். சூப்பர் சிக்சில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதியை எட்டும்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கின்றன.

    போட்டிக்கான இந்திய அணி வருமாறு: ஷபாலி வர்மா (கேப்டன்), சுவேதா செராவத், ரிச்சா கோஷ், திரிஷா, சவும்யா திவாரி, சோனியா மெந்தியா, ஹர்லி காலா, ஹிரிஷிதா பாசு, சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, திதாஸ் சாது, பலாக் நாஸ், ஷப்னம் ஷகில்.

    இந்திய அணி இன்று மாலை 5.15 மணிக்கு போட்டியை நடத்தும் ஒலுலே சியோ தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. 16-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 18-ந்தேதி ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கிறது.

    அரையிறுதி ஆட்டங்கள் (ஜன.27) மற்றும் இறுதிப்போட்டி (ஜன.29) போட்செப்ஸ்ட்ரூமில் நடக்கிறது. இந்த 3 ஆட்டங்களுக்கும் மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 394 குவித்து இருந்தது.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. உஸ்மானா கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். 56-வது டெஸ்டில் விளையாடும் கவாஜா 13-வது செஞ்சுரியையும், 92-வது போட்டியில் ஆடும் ஸ்டீவ் சுமித் 30-வத சதத்தையும் பதிவு செய்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 394 குவித்து இருந்தது.

    • படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி.
    • கோர விபத்தால் பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லாரியை நகர்த்த முயன்றபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்தததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

    எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தது. இரண்டு வீடுகள் மற்றும் பல கார்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரசு அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.

    • பெட்ரோ காஸ்டிலோ அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
    • இந்த அவசர நிலை 30 நாட்கள் அமலில் இருக்கும்.

    லிமா :

    தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் பதவிக்கு வந்தார்.

    ஆனால் அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை அவர் மறுத்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி அவர் திடீரென டெலிவிஷனில் தோன்றிப்பேசியபோது, நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு எம்.பி.க்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

    உடனே அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக் கூடியது. அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அந்த சூட்டோடு சூடாக புதிய அதிபராக, துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.

    அதே நேரத்தில் பெட்ரோ காஸ்டிலோ அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிபதி ஜூவான் செக்லே உத்தரவிட்டார்.

    ஆனால் அவரை விசாரணைக்கு முன்பாக 18 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் முறையிட்டனர். இது தொடர்பான விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இதற்கிடையே பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம், கைது, சிறையில் அடைப்பு என அடுத்தடுத்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக அவரை விடுதலை செய்யக்கோரியும். நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தக்கோரியும் நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர். இந்தப் போராட்டங்களில் வன்முறை தாண்டவமாடியது. சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.

    நாட்டின் தென்பகுதிகளில் பெரும் கலவரங்கள் மூண்டன. பொதுச்சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து இந்தப் போராட்டங்களை ஒடுக்க நேற்று முன்தினம் அந்த நாட்டின் மந்திரிசபை கூடி விவாதித்தது. இதில் நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

    இதையொட்டிய அறிவிப்பை அந்த நாட்டின் ராணுவ மந்திரி ஆல்பர்டோ ஒட்டராலோ நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுச்சொத்துகள் சூறையாடுவதாலும், வன்முறை வெடித்துள்ளதாலும், நெடுஞ்சாலைகளையும், சாலைகளையும் கைப்பற்றி தடுப்புகள் ஏற்படுத்துவதாலும் நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    இந்த அவசர நிலை 30 நாட்கள் அமலில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரு நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் கட்டுப்பாடு தேசிய போலீஸ் படை மற்றும் ஆயுதப்படைகள் வசம் சென்றுள்ளது.

    இதனால் நாடாளுமன்ற உரிமைகள் இடைநீக்கம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தாராளமாக நடமாட முடியாது. மற்ற அரசியல் சாசன வாக்குறுதிகளும் தற்காலிகமாக ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்க அதிபர் மீது பார்ம்கேட் என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
    • தனது பண்ணை வீட்டில் ரூ.32 கோடி திருட்டு போனதை அதிபர் மறைத்ததால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    சியோல்:

    தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவி வகிப்பவர் சிரில் ரமபோசா (70). இவர் மீது 'பார்ம்கேட்' என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இவர் தனது பண்ணை வீட்டில் இருந்து 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32 கோடி) திருட்டு போனதை, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த ஊழல் பற்றி ஒரு சுயாதீன குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை வெளியே கசிந்து விட்டது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பாராளுமன்றம் ஆய்வுசெய்து அடுத்த வாரம் அதிபர் சிரில் ரமபோசா மீது 'இம்பீச்மெண்ட்' (பதவிநீக்க தீர்மானம்) கொண்டு வருவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். எனவே அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்தப் பணம், அவர் ஊழல் செய்து சேர்த்த பணம் என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால் அதிபர் சிரில் ரமபோசா இதை மறுத்துள்ளார்.

    ×