என் மலர்
உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: காரணத்திற்காகவே என் உயிரை கடவுள் காப்பாற்றினார்.. டொனால்டு டிரம்ப்
- இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வலை வாக்குப்பதிவு நடைபெற்றது.
- ஸ்விங் மாகாணங்களான ஏழு மாகாணங்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Live Updates
- 6 Nov 2024 4:08 PM IST
அமெரிக்க தேர்தல் முடிவுகளில் டொனால்டு டிரம்ப் தற்போதைய நிலவரப்படி 277 இடங்களிலும், கமலா ஹாரிஸ் 224 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
- 6 Nov 2024 2:55 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கு பின் பேசிய டொனால்டு டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார். என் உடலின் ஒவ்வொரு மூச்சிலும் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் போராடுவேன்," தெரிவித்தார்.
- 6 Nov 2024 1:52 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 6 Nov 2024 1:12 PM IST
டொனால்டு டிரம்ப் வெற்றி உரை
என் வெற்றிக்கு பாடுபட்ட குடும்பத்தினருக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம். இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மக்களின் நம்பிக்கையை காப்பேன். எனது வெற்றி அமெரிக்காவுக்கு நிவாரணியாக இருக்கும். ஏராளமான தடைகளை தாண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். நான் அனைவரும் இணைந்து வரலாற்றை உருவாக்கியுள்ளோம். சட்டவிரோத குடியேற்றம் தடுத்து நிறுத்தப்படும். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம்.
- 6 Nov 2024 1:08 PM IST
பென்சில்வேனியா (19), அலாஸ்கா (3) மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று 270 எலக்டோரல் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
- 6 Nov 2024 12:00 PM IST
தேர்தலில் பின்தங்கி வரும் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தனது உரையை ரத்து செய்துள்ளார்.
- 6 Nov 2024 11:28 AM IST
16 எலக்ரோல் வாக்குகளை கொண்டு முக்கியமான ஸ்விங் மாகாணமாக கருதப்படும் ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 6 Nov 2024 10:45 AM IST
நியூ மெக்சிகோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் 51.7 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு 5 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.
- 6 Nov 2024 10:40 AM IST
விர்ஜினியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் 51.4 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு 13 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.