என் மலர்
நீங்கள் தேடியது "எல்ஐசி"
- எல்.ஐ.சி. இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப் பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கனவே, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், அஞ்சல்துறை, தகவல் தொடர்புத்துறை, ரயில்வே துறை என அனைத்து துறைகளிலும் இந்தி திணிப்பு நடைபெற்று வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
இந்தி பேசாத மக்களுக்கு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழிக்கும், அதனைத் தொடர்ந்து பிறகு பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா காந்தி ஆகியோர் ஆட்சிமொழிச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் மூலமாகவும் இந்தி பேசாத மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதையெல்லாம் மீறுகிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இந்தி திணிப்பு முயற்சிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.
எனவே, பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்தி திணிப்பை தடுக்கின்ற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!"
"இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் ஏமாற்ற எவ்வளவு தைரியம்? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
- பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.
அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
- சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எல்ஐசியின் சொத்து மதிப்புரூ.51,21,887 கோடியை எட்டியுள்ளது.
- கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் எல்ஐசியின் சொத்துமதிப்பு ரூ.43,97,205 கோடியாக இருந்தது.
எல்ஐசி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
எல்ஐசியின் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு (ஒய்ஒய்) 16.48% அதிகரித்து மார்ச் இறுதிக்குள் ரூ.51,21,887 கோடியை (616 மில்லியன் டாலர்) எட்டியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.43,97,205 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
2024 நிதியாண்டில் எல்ஐசி ரூ.40,676 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எல்ஐசியின் மொத்த பிரீமியம் வருமானம் ரூ.4,75,070 கோடியாகும். இந்த நிதியாண்டில் பங்குபெறும் பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955.87 கோடியை போனஸாக எல்ஐசி நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒரு மாதத்தில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை:
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது.
- தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
சென்னை :
கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாத காலத்தில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருவாய் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 244 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 673 கோடியாக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பிரீமிய வருவாய் 20.65 சதவீதம் அதிகம் ஆகும்.
இதேபோல 9 மாதத்தில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22 ஆயிரத்து 970 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ.1,672 கோடியாக இருந்தது.
நடப்பு காலத்தில் லாப உயர்வுக்கு காரணம், ரூ.19,941.60 கோடி (வரிகள் நீங்கலாக), 'நான் பேர்' கணக்கில் இருந்து முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றப்பட்டதே ஆகும். எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. அதன் விளைவாக, 9 மாதங்களுக்கான முதல் வருட பிரீமிய வருவாய் அடிப்படையில் எல்.ஐ.சி.யின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 65.38 சதவீதம். இது கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 61.40 சதவீதம் ஆக இருந்தது.
இதேபோல, 9 மாதத்தில் தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 1.26 கோடியாக இருந்தது. இது 1.92 சதவீதம் அதிகம் ஆகும். எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர் நம்பகத்தன்மை, சொத்துகளின் சந்தை மதிப்பு, புது வணிக லாப விளிம்பு போன்ற செயல்திறன் வழிகாட்டிகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தை 3-வது காலாண்டு முடிவுகள் காட்டியுள்ளது.
இதுகுறித்து, எல்.ஐ.சி.யின் தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், "இலக்கை அடைவதில் நாங்கள் உறுதியாக முன்னேறி வருகிறோம். வளர்ந்து வரும் காப்பீட்டு சந்தையில் எங்கள் சந்தை பங்களிப்பை தக்க வைப்பது மட்டுமல்லாமல் அதிகரித்து முன்னேறி செல்வோம் என திடமாக நம்புகிறோம்" என்றார்.
மேற்கண்ட தகவல் எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன.
- எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.
மும்பை :
இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.
அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது.
அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு' என்று தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.
- இந்த திட்டம் ‘ஆப்லைன்' மற்றும் ‘ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.
- ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.
சென்னை :
எல்.ஐ.சி. மண்டல மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எல்.ஐ.சி. ஆப் இந்தியா கடந்த 5-ந்தேதி முதல் பென்ஷன் (ஆன்டியு) திட்டமான புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்களை உயர்த்தி உள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1,000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன.
ஒற்றை பிரிமீய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாருக்கு தனிநபர் மற்றும் கணவர், மனைவியுடன் கூடிய 'ஜாயிண்ட் லைப்' ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த பாலிசி, பணியில் இருப்பவர்களுக்கு அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்குப்பின் நிலையான பென்ஷன் வருமானத்தை அளிக்கக்கூடியது. முதலீட்டுக்காக உபரியாக பணம் வைத்திருப்போருக்கும் ஏற்றது.
இந்த திட்டம் இளம் வயதினர் தங்களது ஓய்வுகாலத்தை சிறந்த வகையில் திட்டமிட வழிவகுக்கிறது. பாலிசியின் தொடக்கத்திலேயே வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உத்தரவாதமாக அளிக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.
புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் வருடாந்திர பென்ஷன் தொகையை எல்.ஐ.சி.யின் இணையதளம் மற்றும் பல்வேறு எல்.ஐ.சி. ஆப்களில் உள்ள கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். இந்த திட்டம் 'ஆப்லைன்' மற்றும் 'ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள எல்.ஐ.சி. கிளையை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
- தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது.
சென்னை :
எல்.ஐ.சி. நிறுவனம் 67-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் (மார்ச் 31-ந்தேதி வரை) 2.17 கோடி புதிய பாலிசிகளை பெற்று முதல் பிரீமிய வருவாயாக ரூ.1.98 லட்சம் கோடிகளை ஈட்டி உள்ளது. இதன்மூலம் 7.92 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நடப்பு ஆண்டிலும் எல்.ஐ.சி. முதல் பிரீமிய வருவாய் அடிப்படையில் 64.96 சதவீதம் சந்தை பங்களிப்பை பெற்றுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் எல்.ஐ.சி. 267.23 லட்சம் உரிமங்களுக்காக ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 568 கோடிகளை அளித்துள்ளது.
31.3.2022 அன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யில் தனி நபர் வணிகத்தின் கீழ் பல்வேறு விதமான மக்களின் தேவைகளுக்காக 33 விதமான திட்டங்கள் விற்பனைக்கு உள்ளன. பீமா ரத்னா, தன் சன்சய் என 2 புதிய திட்டங்களை எல்.ஐ.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.
மாறிவரும் காலத்துக்கு ஏற்ப பாலிசிகளை திறம்பட சேவை செய்வதற்காக நவீன தொழில்நுட்பங்களை எல்.ஐ.சி. அறிமுகம் செய்து வருகிறது. பாலிசிதாரர்கள் தங்களது பிரீமியத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம். பென்ஷன் பாலிசிதாரர்களுக்கான டிஜிட்டல் இருப்பு சான்றிதழை சமர்ப்பிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 'ஜீவன் சாக்ஷயா' என்ற செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எல்.ஐ.சி.யின் பொன்விழா பவுண்டேஷன் என்.ஜி.ஓ.க்கள் மூலமாக 646 திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, உரிமத்தீர்வு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வணிகம் போன்றவற்றின் அடிப்படையில் பல விருதுகளை எல்.ஐ.சி. பெற்றுள்ளது.
இந்த 66-வது ஆண்டு நிறைவு விழாவில், எங்கள் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கைக்காக பாலிசிதாரர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உங்களது நலனே எங்களது பொறுப்பு என்பதற்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
- அமேசான் 2-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி :
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அவற்றின் மொத்த வருவாய் அடிப்படையில் 'பார்ச்சுன்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது. அதுபோல், கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிதிஆண்டில், உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில், கடந்த நிதிஆண்டில் முதல்முறையாக பங்குச்சந்தையில் நுழைந்த எல்.ஐ.சி. நிறுவனம், 98-வது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. இந்த ஆண்டு 51 இடங்கள் முன்னேறி, 104-வது இடத்தை பிடித்துள்ளது.
பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 5 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். இந்திய எண்ணெய் கழகம் (142-வது இடம்), ஓ.என்.ஜி.சி. (190-வது இடம்), பாரத ஸ்டேட் வங்கி (236-வது இடம்), பாரத் பெட்ரோலியம் (295-வது இடம்) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
தனியார் துறையில் டாடா குழுமத்தின் 2 நிறுவனங்களும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அமேசான் 2-வது இடத்திலும், அடுத்த 3 இடங்களை சீன நிறுவனங்களும் பிடித்துள்ளன.