search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த Sleeping Pod படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், WIFI என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது
    • ஆன்லைன் மற்றும் ரெயில் நிலையத்தில் இதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம்.

    ஐதராபாத் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க Sleeping Pod வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், WIFI என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த Sleeping Pod வசதிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    ஆன்லைன் மற்றும் ரெயில் நிலையத்தில் இதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் மணிநேரம் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.

    • ரூ.799.74 கோடியில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதனை திறந்து வைத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.799.74 கோடியில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் நேரு உயிரியல் பூங்காவில் இருந்து அரம்கர் பகுதி வரை சுமார் 4.04 கிலோ மீட்டர் தூரம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் 2-வது பெரிய மேம்பாலமாக இது திகழ்கிறது. இந்த மேம்பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதனை திறந்து வைத்தார். இந்த புதிய பிரமாண்ட பாலத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட்டது.

    • ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மெய் மறந்து முத்த மழை பொழிந்தனர்.
    • பயணிகள் காதல் ஜோடியின் சேட்டையை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி. நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்து இருந்தனர்.

    அப்போது இளம் காதல் ஜோடி ஒன்று ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் நிலையத்தில் இருந்த மேடையில் அமர்ந்து காதல் ஜோடி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மெய் மறந்து முத்த மழை பொழிந்தனர்.

    மற்றவர்கள் தங்களைப் பார்க்கிறார்கள் என்பதை காதல் ஜோடி பொருட்படுத்த வில்லை. இதனைக் கண்ட பயணிகள் முகம் சுளித்தபடி சென்றனர்.

    ஒரு சில பயணிகள் காதல் ஜோடியின் சேட்டையை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகள் இது போன்ற அநாகரிமான செயல்களை தவிர்க்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

    • சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
    • டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர்.

    ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடிகை சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர். ரசிகர்கள் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை வாங்கினர்.

    ஆனால், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரித்தனர். மறுப்பு இருந்தாலும், பிரச்சனை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்து சன்னி லியோனை ஐதராபாத் வரவழைத்தனர்.

    டிக்கெட் வாங்கியவர்களும் அங்கு குவிந்தனர். ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்டதை வீடியோ செய்தி மூலம் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கன்னட நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 30. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஐதராபாத் வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.

    • 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.
    • 2 பெண்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.

    அதனை கண்ட சுங்க அதிகாரிகள் அந்த கூடைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் கவர்ச்சியான 2 பாம்புகள் இருந்தன. இதனைக் கண்டு சுங்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் பாம்புகளுடன் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்துள்ளனர்.

    இந்த பாம்புகள், அதிக விஷம் கொண்டவை. 2 பெண்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர். பாம்புகள் மீட்கப்பட்டன.

    பாம்பு கடத்தலில் இந்த பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்டுள்ளார்களா அல்லது யாரேனும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுகிறார்களா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஐதராபாத்தில் வீட்டு செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி.
    • 150-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு இனங்கள் உள்ளன.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் மெகா பெட் ஷோ என்ற பெயரில் வீட்டு செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி நடந்தது. இதில் நாய் மற்றும் பூனைகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை அலங்கரித்து அழைத்து வந்திருந்தனர்.

    500-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 100 பூனைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன. ஒவ்வொரு விலங்குகளும் தங்களுக்கு ஏற்ற திறமைகளை காட்டி பார்வையாளர்களை கவர்ந்தன.

    மேலும் நாய், பூனைகள் வரிசையாக ஒய்யார நடை போட்டு அசத்தின. இந்த கண்காட்சியை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டு ரசித்தனர்.

    150-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு இனங்கள் உள்ளன. அவற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

    நாய்களுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாயை எப்படி பாதுகாப்பாக வளர்ப்பது. அது உங்களை தாக்க வந்தால் எப்படி எதிர் வினையாற்றுவது என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • இரவில் நீல நிற விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • பெரிய ராட்சத மீன் நீந்தி செல்வதை போல காட்சியளிக்கும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய கட்டிடம் ராட்சத மீன் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இரவில் நீல நிற விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் மீன் கண் போன்ற ராட்சத விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தை பார்க்கும்போது நகரத்தின் நடுவில் பெரிய ராட்சத மீன் ஒன்று நீந்தி செல்வதை போல பிரமிப்பாக காட்சியளிக்கும்.

    இதனை தி பிஷ் பில்டிங் என அழைத்து வருகின்றனர். தனித்துவமான கட்டிடக்கலைக்கு ஒரு அடையாளமாக இந்த ராட்சத மீன் கட்டிடம் மாறி உள்ளது.

    மேலும் உலகம் முழுவதும் உள்ள வித்தியாசமான கட்டிடங்கள் பட்டியலில் இந்த ராட்சத மீன் கட்டிடம் தற்போது இடம்பெற்றுள்ளது. 

    • ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்

    மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு தரப்பு தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்து வருகிறார். பல்லார்பூரில் இன்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மகாயுதி வேட்பாளரும், பா.ஜ.க. தலைவருமான சுதிர் முங்கண்டிவாரை ஆதரித்து பேசிய அவர்,

    பழைய நகர மக்கள் (ஐதராபாத்) எப்போதும் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் பண்டிகைகளை விமர்சிக்கிறார்கள். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் மத வேறுபாடின்றி அனைவரையும் மதிக்கிறார்கள். இருப்பினும், சனாதன தர்மத்தை மதிக்காதவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

    சத்ரபதி சிவாஜி மற்றும் பால் தாக்கரே ஆகியோரின் உத்வேகத்தால் எனது கட்சி நிறுவப்பட்டது. நான் இங்கு வந்திருப்பது வாக்குகளுக்காக அல்ல. மராட்டிய மாநிலம் மற்றும் சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன் என்பர் பேசினார்.

    • நீங்கள் யோகியாக விரும்பினால் ‘கெருவா’ அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள்
    • ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர்கள் படை உங்கள் கிராமத்தை எரித்தார்கள், இந்துக்களை கொன்றார்கள்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பு தேசிய தலைவர்களும் மகாராஷ்டிராவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணிக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து விமர்சித்துள்ளார்.

    [இந்துக்கள்] சேர்த்திருந்தால் பாதுகாப்பு , தனித்தனியாக இருந்தால் வெட்டப்படுவார்கள் என்ற பதேங்கே தோ கதேங்கே என்ற கோஷத்தை எழுப்புபவர் ஒரு உண்மையான யோகியாக இருக்க முடியாது, நீங்கள் யோகியாக விரும்பினால் 'கெருவா' அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கார்கே ஆதித்யநாத்தை விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் அச்சல்பூர் [Achalpur] பகுதியில் பிரசாரம் செய்த அவர், நான் ஒரு யோகி, என்னைப் பொறுத்தவரை, தேசம் முதன்மையானது. ஆனால், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சமாதான அரசியலே முதன்மையானது. கார்கே ஜி என் மீது கோபப்படாதீர்கள், நீங்கள் கோபப்பட வேண்டும் என்றாலே ஐதராபாத் நிஜாம் மீது கோபப்படுங்கள்.

    ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர்கள் படை உங்கள் கிராமத்தை எரித்தார்கள், இந்துக்களை கொன்றார்கள். உங்கள் மதிப்பிற்குரிய தாய், சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களை எரித்தார்கள். இந்த உண்மையை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் என்று பேசினார்.மேலும் இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற முடியாது என்பதற்காக கார்கே இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார் என்றும் யோகி தெரிவித்தார்.

     முன்னதாக சுதந்திரத்திற்குப் பிறகு நிஜாம் ஆட்சி நடந்து வந்த ஐதராபாத் இந்தியாவுடன்  இணைய மறுத்தது. அப்போது இந்திய ராணுவத்துக்கும் நிஜாமின் ரசாகர்கள் படைக்கும் இடையே மோதல் நடந்தது. கார்கே தற்போது கர்நாடகாவில் கார்கேவின் சொந்த கிராமம் இருக்கும் பிடார் பகுதி அந்த சமயம் ஐதராபாத் நிஜாம் ஆளுகையின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
    • இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்

    பார்வையற்ற தம்பதியினர் தங்களது மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் அவருடைய சடலத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கலுவா ரமணா அவரது மனைவி சாந்திகுமாரி ஆகியோர் தங்களுடைய இளைய மகன் பிரமோத்துடன் ஐதராபாத்தின் பிளைண்ட்ஸ் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்த பார்வையற்ற தம்பதியினரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

    4 நாட்களுக்கு முன்பு தூக்கத்திலேயே பிரமோத் இறந்துவிட்டதாக தெரிவித்த போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பார்வையற்ற தம்பதியின் மூத்த மகன் பிரதீப் என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் பிரதீப்பிடம் அவரது பெற்றோர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

    30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். மேலும் அவரது 2 மகள்களையும் அவரது மனைவி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    ×