என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பத்தூர்"
- சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர்.
- கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்தது ஆகும்.
நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர்.
அவர்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரபரப்பான நகர பகுதியில் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருக்காது, அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றனர். ஆனால் அவர்களின் கணிப்பு தவறு என்பதை போன்று அங்கு ஒரு சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறுத்தை வனத்துறையினரிடம் இருந்து தப்பி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து சென்றது. அப்போது அங்கு பள்ளி சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புத்தகரத்தை சேர்ந்த கோபால் (வயது 55) என்பவரை நெற்றி, காது பகுதியில் சிறுத்தை தாக்கிவிட்டு மறைவான இடத்தில் புகுந்தது.
சிறுத்தை தாக்கியதை அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் தொற்றியது.
பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்து மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டி பாதுகாத்தனர். சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த கோபாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
சிறுத்தை பள்ளி வளாகத்தில் இருப்பதால் மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம், கதவுகளை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அருகில் இருந்த பள்ளிகளிலும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் தெரிவித்தனர். சிறுத்தை புகுந்த தகவல் திருப்பத்தூர் நகர பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் தங்கள் குழந்தைகளின் நிலைமை என்ன ஆனதோ என்ற அச்சத்துடன் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு பதற்றத்துடன் குவிந்தனர்.
இதையடுத்து அங்கு சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை திடீரென 10 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அருகே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்குள் புகுந்தது. சிறுத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய தகவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வகுப்பறை கதவுகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவிகளை பத்திரமாக பெற்றோருடன் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில பள்ளி குழந்தைகள் பயத்துடன் அழுது கொண்டு ஓடினர். அவர்களுக்கு ஆசிரியர்களும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினர்.
சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர். மாலை 5.30 மணிக்கு அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது பொதுமக்களும், பெற்றோர்களும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புகுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவிகளை பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
பின்னர் கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.
கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
- சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது.
- காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவிப்பு.
திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த நிலையில், அந்நகர பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சிறுத்தை இருப்பதை கண்டு தப்பிக்க முயன்று கார் பார்க்கிங்கில் உள்ள காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிகிறது.
பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
- திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- பிரபு அனைவரையும் வரவேற்றார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் ஜெயகுண சேகரன், சிவமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அரசு தலைமை கொரடா மனோகரன், தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா ஆகியோர் தி.மு.க. அரசை பற்றி விமர்சனம் செய்தனர்.
இந்த மேடையில் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு செந்தில்நாதன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
- 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட மகிபாலன் பட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனியன் பூங்குன்றனாருக்கு மணி மண்டபம் அமைத்தல், அவரது பெயரில் பொது நூலகம் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். சமுதாயக்கூடம் கட்டுவது, கொன்னத்தான் கண்மாயில் தடுப்பணை கட்ட வேண்டும். எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துவார் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அவசரகால தேவையை கருதி காட்டு வழிப்பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். பூலாம்பட்டியில் அங்கன்வாடி மையம், நீர்த்தேக்க மேல்தொ ட்டியை இடித்து புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.
இதில் யூனியன் உதவியாளர் சதீஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பொதுப்பணி த்துறையின் சார்பில் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ10.03கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு அவர் கூறியதாவது:-
திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ3.71கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமான பணிகளின் நிலை குறித்தும், காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ1.98கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோன்று காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ4.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமணன், உதவி பொறி யாளர் சந்தோஷ் குமார், வட்டாட்சி யர்கள் வெங்க டேசன் (திருப்ப த்தூர்), தங்கமணி (காரை க்குடி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புத்தூரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முஸ்லிம் ஜமாத்தார்கள் நடத்திய இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று தலைமை வகித்தார்.
முன்னதாக மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலிம் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் அனைத்து பள்ளி ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருன் ஜமான், ஆதில் மௌலானா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணை தலைவர் கான் முகமது, நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெமி சுலைமான் பாதுஷா, ஷமீம் நவாஸ், அபுதாஹிர் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி கேயன், நாராயணன், நகர துணை செயலாளர் உதய சண்முகம், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிளாசா ராஜேஸ்வரி, சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, பழக்கடை அபுதாஹிர், ஷாஜகான், வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.எஸ்.ஆர்.சி.லெட்சுமணன் நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் பயணிகளுக்கு அவலம் தொடருகிறது.
- இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முகமது தாரிக். இவர் தாயாருடன் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருவதற்காக மாட்டு த்தாவணி பஸ் நிலையத்தில் மன்னார்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். நடத்துனரிடம் திருப்பத்தூர் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு நடத்துனர் இது மன்னார்குடி செல்லும் பஸ். தொலைதூரமாக செல்லும் பயணிகளுக்கு மட்டுமே நாங்கள் முன்னுரிமை வழங்க முடியும். திருப்பத்தூர் பயணிகள் இந்த பஸ்சில் ஏறக்கூடாது என்று கூறினார். இருவ ருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலையில் அருகில் இருந்தவர்கள் அமைதிப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து முகமது தாரிக் திருப்பத்தூரில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவலை தெரிவித்தார். அந்த பஸ் திருப்பத்தூர் வரும்போது சாலையில் பஸ்சை மறித்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கில புத்தாண்டு தினமாக இருப்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வலியு றுத்தினார்.
இனி இதுபோன்று நடக்காத வகையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்வதாகவும் இன்ஸ்பெக்டர் தெரி வித்தார். அவனைத் தொடர்ந்து நடத்துனர் ராஜே ந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருபவர்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
- திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- திருப்பத்தூரில் சமூக வளர்ச்சி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதற்குடியோன் சமூக வளர்ச்சி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு முப்பெரும் விழாவாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா, 10, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, மேல்நிலை கல்வி முடித்தோருக்கு உயர்கல்வி வழிகாட்டல் விழா நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கலைமகள் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விராமதி ஆராயி கருப்பையா, மாதவராயன்பட்டி பானுமதி சேது முன்னிலை வகித்தனர். நிர்வாகி சுப்பிரமணியன் வரவேற்றார்.
சென்னை சுங்கத்துறை இணை கமிஷனர் பாண்டியராஜா சிறப்புரையாற்றினார், ஆசிரியர் பால்ராஜ், சமூகவியலாளர் ஜெய்சங்கர், ஆசிரியர்கள் மனோகரன், நடராஜன், கணோசன், அழகுமணி, ரமேஷ், மற்றும் பாலமுருகன் ஆகியோர் பேசினர். விழாக்குழுவினர் சந்திரசேகர், விஸ்வநாதன், அண்ணாதுரை, பாண்டியன், ரவி, சரவணன், ஆசைத்தம்பி, காமராஜ், பழனிக்குமார், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாணிக்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர். கல்லல் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.