search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் பயணிகளுக்கு தொடரும் அவலம்
    X

    திருப்பத்தூரில் பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருப்பத்தூர் பயணிகளுக்கு தொடரும் அவலம்

    • திருப்பத்தூர் பயணிகளுக்கு அவலம் தொடருகிறது.
    • இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முகமது தாரிக். இவர் தாயாருடன் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருவதற்காக மாட்டு த்தாவணி பஸ் நிலையத்தில் மன்னார்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். நடத்துனரிடம் திருப்பத்தூர் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு நடத்துனர் இது மன்னார்குடி செல்லும் பஸ். தொலைதூரமாக செல்லும் பயணிகளுக்கு மட்டுமே நாங்கள் முன்னுரிமை வழங்க முடியும். திருப்பத்தூர் பயணிகள் இந்த பஸ்சில் ஏறக்கூடாது என்று கூறினார். இருவ ருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலையில் அருகில் இருந்தவர்கள் அமைதிப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து முகமது தாரிக் திருப்பத்தூரில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவலை தெரிவித்தார். அந்த பஸ் திருப்பத்தூர் வரும்போது சாலையில் பஸ்சை மறித்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கில புத்தாண்டு தினமாக இருப்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வலியு றுத்தினார்.

    இனி இதுபோன்று நடக்காத வகையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்வதாகவும் இன்ஸ்பெக்டர் தெரி வித்தார். அவனைத் தொடர்ந்து நடத்துனர் ராஜே ந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருபவர்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×