search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரோல்"

    • பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார்.
    • 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி, கோர்ட்டுகளும் கைதிகளுக்கு பரோலில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு அனுமதி வழங்கும்.

    இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட் விவசாயம் செய்வதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 3 மாதம் பரோல் வழங்கி உள்ளது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சித்ததேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 36). இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக பெண்ணின் கணவர் இருந்துள்ளார்.

    இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை சந்திரா கொலை செய்திருந்தார். இந்த கொலை வழக்கில் ராமநகர் மாவட்டம் கனகபுரா கூடுதல் செசன்சு கோர்ட்டு, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி சந்திராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி இருந்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையில், கனகபுராவில் தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யப் போவதாகவும், அதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி சந்திரா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளியே வரவில்லை என்பதையும் மனுவில் சந்திரா குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சந்திரா கடந்த 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே வராமல் இருப்பதை கருத்தில் கொண்டும், தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைப்பதாலும், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த 90 நாட்களில் விவசாய பணிகளை மட்டுமே சந்திரா மேற்கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த விதமான சட்டவிரோத செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • இதுவரை மொத்தம் 259 நாட்கள் ராம் ரஹீம் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார்.
    • தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

    அரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 46 இடங்களில் வெற்றி பற்று பாஜக 3 வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தல் சமயத்தில் பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளி வந்தது அரசியல் ரீதியான சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது.

    தேரா சாச்சா ஆசிரமத்தை நடத்தி வந்த மதகுரு ராம் ரஹீம் பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீமுக்கு சரியாக அரியானா தேர்தலை ஒட்டி மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

    கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டது. 4 ஆண்டு சிறை வாசத்தில் இதுவரை மொத்தம் 259 நாட்கள் அவர் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார். அரியானாவில் அதிக சீடர்களையும், பக்தர்களையும் கொண்டுள்ள ராம் ரஹீம் தேர்தல் காலங்களில் மட்டுமே இதுவரை அதிகம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ராம் ரஹீம் இருக்கும் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சங்வான் தற்போது நடந்து முடிந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சார்கி தாத்ரி [Charkhi Dadri] தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை 1,957 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

     

    தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இவர் பாஜகவில் இணைந்தார். இவர் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பாரோல் வழங்கப்பட்டுள்ளது.

    சிறையில் இருப்பவர்களுக்கு நீதிமன்றம் பரோல் வழங்கும் என்றாலும் கைதி நடத்தை உள்ளிட்டவை குறித்து ஜெயிலரிடம் அறிக்கை வாங்கிய அவரின் பரிந்துரைக்கு பின்னரே பரோல் வழங்கும். பரோல் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மக்களவை தேர்தலில் காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • அம்ரித்பால் சிங், மக்களவை எம்.பி.யாக பதவியேற்க ஜூலை 5 முதல் 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் காதூர் சாஹிப் தொகுதியில் சிறையில் உள்ள காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உபா சட்டத்தில் கைதாகி திகார் சிறையில் உள்ள ஷேக் அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற 2 எம்.பி.க்களும் சிறையில் உள்ளதால் அவர்கள் எவ்வாறு பாராளுமன்றம் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், நேற்று சிறையில் உள்ள அப்துல் ரஷீத் எம்.பி. ஆக பதவி ஏற்பதற்காக ஜூலை 5 ஆம் தேதி 2 மணி நேரம் கஸ்டடி பரோல் கொடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து, இன்று காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங், மக்களவை எம்.பி.யாக பதவியேற்க ஜூலை 5 முதல் 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான இவர், தற்போது அசாம் மாநில சிறையில் உள்ளார்

    சிறையில் உள்ள இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தால் தங்களின் எம்.பி பதவியை அவர்கள் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரிசி மானிய வழக்கில் சிறை தண்டனை பெற்றார் சின்வத்ரா
    • மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் சின்வத்ராவின் தண்டனையை 1 ஆண்டாக குறைத்தார்

    தென்கிழக்கு ஆசியாவில், இந்தோசீன தீபகற்பத்தில் உள்ள நாடு, தாய்லாந்து. இதன் தலைநகரம், பாங்காக் (Bangkok).

    தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின் சினவத்ரா (Thaksin Shinawatra) மீது அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தக்சினுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, தக்சின், 2008ல் தாய்லாந்தை விட்டு வெளியேறி, 15 ஆண்டுகள் அயல்நாடுகளில் தங்கி இருந்தார்.

    கடந்த 2023ல் மீண்டும் நாடு திரும்பினார்.

    தாயகம் திரும்பிய தக்சினுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், தக்சின் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிறையிலிருந்து 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


    தக்சினின் உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட 8-ஆண்டுகால சிறை தண்டனையை, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), 1 ஆண்டாக குறைத்தார்.

    இதனை தொடர்ந்து தக்சின் சினவத்ராவுக்கு சிறப்பு பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து, தற்போது 76 வயதாகும் தக்சின் இன்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

    பாங்காக் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தக்சின் தனது காரில் புறப்பட்டு சென்றார். தக்சினை அவரது மகள் பெடோங்டார்ன் சினவத்ரா (Paetongtarn Shinawatra) வரவேற்று தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.


    தக்சின், 2 முறை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

    தாய்லாந்தில் நடைபெறும் பிரதமர் சிரெத்தா தவிசின் (Srettha Thavisin) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, தக்சின் குடும்பத்தார் பின்புலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
    • பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ரவிச்சந்திரன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எட்டயபுரம்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

    இவரது தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் சூரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று தங்கினார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை, ஓய்வு தேவை என்ற அடிப்படையில் டிசம்பர் 17-ந் தேதியில் இருந்து அடுத்தடுத்து பரோல் நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு இதய பாதிப்பு, மன அழுத்தம் இருப்பதால் கூடுதல் ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பை மேலும் நீட்டிக்குமாறு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் பரோல் முடிவடைந்து சிறைக்கு செல்ல இருந்தார்.

    இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வு தேவைப்படுவதால் தமிழக அரசு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது.

    பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ரவிச்சந்திரன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரோல்.
    • இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "பரோல்". இப்படத்தை டிஆர்ஐபிஆர் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ளார். இப்படத்தி இசையை ராஜ்குமார் அமல் கவனிக்க ளிப்பதிவை மகேஷ் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    பரோல் படக்குழு

    பரோல் படக்குழு

     

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    பரோல் படக்குழு

    பரோல் படக்குழு

     

    இதில் பேசிய ஆர்.எஸ்.கார்த்திக் பேசியதாவது, இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

    மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது மகன் திருமணத்துக்கான பரோலில் வந்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரம் ஜாமின் வழங்கி ராஞ்சி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav
    ராஞ்சி:

    பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பாட்னா திரும்பிய போது

    அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.

    இதனை அடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி அவர் ராஞ்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று பரிசீலித்த நீதிபதிகள் 6 வார காலம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    ஏற்கனவே, அவரது மகன் திருமணத்தை ஒட்டி அவருக்கு சிறைத்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav
    ×