என் மலர்
நீங்கள் தேடியது "போர்டு"
- கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
- வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அது பற்றிய விவரங்கள் வருமாறு:-
போர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர் பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டு உள்ளது.
போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பு நிகழ்வில், போர்டு நிறுவனத்தின் ஐ.எம்.ஜி. தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர். ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது.
ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் திறன் மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாயப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
- சங்கரன் என்பவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் படித்த மாணவர்.
- இஸ்ரோ விஞ்ஞானியான சங்கரனை பாராட்டி பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் அதன் லேண்டரை வெற்றிகரமாக இறக்கி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், உலக நாட்டு தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி குழுவில் இடம் பெற்றிருந்த சங்கரன் என்பவர் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கடந்த 1983 -ம் ஆண்டில் இருந்து 1985-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் படித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து சரபோஜி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சங்கரனை பாராட்டி அவரது படத்துடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் விஞ்ஞானி சங்கரன் மற்றும் சந்திரயான்- 3 வெற்றி விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்தி பெருமிதம் கொள்கிறோம் . இங்கனம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிளக்ஸ் போர்டை கல்லூரியில் படிக்கும் மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து நாமும் சங்கரனை போல் விஞ்ஞானியாக மாறி இந்தியாவுக்கு பல்வேறு புகழை தேடி தர வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.
- கரும்பு சாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதேபோல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துக்குளி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கரும்பு சாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஸ்மார்ட் போர்டினை பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரி யர்கள், மேச்சேரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மேச்சேரி ராஜா, பாமக வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகரன், ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொருளாளர் ஜெயந்தி பிரகாஷ், வன்னியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கோபால், இளைஞர் அணி மல்லிகார்ஜுன், பரமசிவம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துக்குளி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் எம்.சி. மாரியப்பன், பாமக ஒன்றிய செயலாளர் சசிகுமார், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- போர்டு நிறுவனம் ஏழாம் தலைமுறை மஸ்டங் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய போர்டு மஸ்டங் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது பாரம்பரியம் மிக்க மஸ்டங் மாடலின் ஏழாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரில் புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர், சக்திவாய்ந்த வி8 சேர்த்து இருவித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
போர்டு வரலாற்றில் முதல் முறையாக மஸ்டங் டார்க் ஹார்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது டிராக் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். இதில் அதிக செயல்திறன் வழங்கும் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது.
புதிய தலைமுறை மஸ்டங் மாடல் ஜிடி மற்றும் இகோபூஸ்ட் ட்ரிம் லெவல்களில் கூப் மற்றும் கன்வெர்டிபில் பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்டீரியர் டிசைன் 1960-க்களில் வெளிவந்த ஒரிஜினல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜிடி மற்றும் இகோபூஸ்ட் மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.
ஒட்டுமொத்தத்தில் புதிய மஸ்டங் ஹெக்சகன் வடிவ கிரில், பெரிய ஏர் இன்லெட்கள், மூன்று பார் எல்இடி ஹெட்லைட்கள், எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட பூட், கூர்மையான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மொத்தத்தில் 11 நிறங்களில் கிடைக்கிறது. இதில் வேப்பர் புளூ மற்றும் எல்லோ ஸ்பிலாஷ் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
ஏழாம் தலைமுறை போர்டு மஸ்டங் மாடல் 5.0 லிட்டர் கோயோட் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் கோல்டு ஏர் இண்டேக், டூயல் திராட்டில் பாடி டிசைன் மற்றும் அதிக ஏர்-ஃபுளோ ரேட்களை வழங்குகிறது. இத்துடன் 2.3 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட ட்வின் ஸ்கிரால், இகோபூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இகோபூஸ்ட் வெர்ஷனில் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், வி8 என்ஜினில் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்களின் செயல்திறன் பற்றி போர்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- போர்டு நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சனந்த் ஆலை பணிகளை போர்டு நிறுத்தியது.
போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து கடைசி கார் போர்டு இகோஸ்போர்ட் வெளியிடப்பட்டது. இந்த மாடல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் யூனிட் ஆகும். இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இதைத் தொடர்ந்து போர்டு நிறுவனம் உற்பத்தி பணிகளை மெல்ல நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் போர்டு சனந்த் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையில் இருந்து ஃபிரீஸ்டைல் மாடல் கடைசி யூனிட்-ஆக வெளியிடப்பட்டது. சென்னை ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் மீண்டும் பணிகளை தொடங்குவது பற்றி போர்டு நிறுவனம் இதுவரை எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. போர்டு நிறுவனம் தனது சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆலையும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.