search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    • தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    • வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழைந்தைகளுடன் வந்த பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தற்போது தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் மட்டும் செல்கிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும், வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பிரகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    • வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
    • வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதிகபட்சமாக 109 டிகிரி வரை வெயில் பதிவானதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர். அதன் பிறகு பருவமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர வெயில் தோற்றுப்போகும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    தொடர்ந்து 103 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் வெளியில் தாக்கத்தினால் புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். வெளியே செல்லும்போது தோல் எரிவது போன்று உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், மோர், கரும்பு, குளிர பானங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பருகி வருகின்றனர். மீண்டும் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

    • மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
    • கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழகத்தில் வழக்கமாக மார்ச் 20-ந் தேதிக்கு மேல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி 3-வது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கோடை மழை இல்லாமல் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

    குறிப்பாக ஏப்ரல்மாதம் முழுக்க வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், அந்தமாதம் முழுவதும் 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெப்பநிலை நீடித்தது. பின்னர் மே மாதத்தில் ஓரிருநாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் வெயில் தாக்கம் காரணமாக அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    சேலத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 88 முதல் 92 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. ஆனால் நடப்பு மாதம் தொடக்கத்தில் வெயிலின் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது செப். 1-ந் தேதி 94.7 டிகிரியாக பதிவானது. 2-ந் தேதி 94.2, 3-ந் தேதி 92.8, 4-ந் தேதி 89.6, 5-ந்தேதி 95, 6-ந் தேதி 95.6, 7-ந் தேதி 93, 8-ந்தேதி 93.5, 9-ந் தேதி 94.5, 10-ந் தேதி 96, 11-ந் தேதி 92.5, 12-ந் தேதி 96.9, 13-ந் தேதி 97.1, 14-ந் தேதி 94.5, 15-ந் தேதி 97.2, நேற்று (16-ந்தேதி) 99.4 டிகிரியாக வெப்பநிலை அதிகரித்தது.

    கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து இயல்புநிலைக்கு திரும்புவதுதான் வழக்கம். ஜூன் மாதம் முதல் விட்டு விட்டு மழை பெய்யும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.

    ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஜூலை மாதம் வரை புதுவையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    கடந்த மாதம் ஒரு சில நாட்கள் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆவலுடன் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடித்தது. இருந்தபோதிலும் வெயிலின் அளவு 98.24 டிகிரி என்றே பதிவாகியிருந்தது.

    • சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    • காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    பொதுவாக மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது. சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று பகலில் சுட்டெரித்த வெயில் தாக்கியது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதே போல இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்குவதுபோல இன்று தாக்கியது. காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கோடை காலத்தில் உஷ்ணம் இருப்பது போல சென்னைவாசிகள் பகலில் வெயிலின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    "மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டி மேகங்கள் சூழ்ந்து மழைப் பொழிவை கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருப்பதற்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணமாகும்.மேகக்கூட்டங்கள் இல்லை. மேகக்கூட்டங்கள் உருவாகினால் மழைக்கான வாய்ப்பு ஏற்படும். மேகக்கூட்டங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது இந்த சீசனில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல" என்றார்.

    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    மே மாதம் முடிவடைந்தாலும், வெயில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் ஜூன், ஜூலை வரை நீடிப்பது வழக்கம்தான். இந்நிலையில், வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முலாம் பழம்

    வெயிலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக விளங்குகிறது. ஆரோக்கியமான சுவையான உணவுப்பொருளாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்கிறது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி இவை இரண்டும் அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ப்ளாக் பெர்ரி, ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்றவைகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடல் இழக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யக்கூடியது. வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் ஏற்படலாம். அதை தடுத்து உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கலாம். மீன் மற்றும் இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    இனிப்பு சோளம்

    கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். அதை வேகவைத்தாலும், சுட்டு சாப்பிட்டாலும் இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    அவகேடோ

    ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய உணவுப்பொருளாக அவகேடோ உள்ளது. ஏனெனில் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பப்பெற்றது. இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது.

    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
    • வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகம், புதுவையில் இன்று எந்த ஒரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

    இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டில் அதிகமாக வெப்பம் பதிவான இடங்கள்

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.8, கரூர் பரமத்தி - 97.7, மதுரை விமான நிலையம் - 94.46, பாளையங்கோட்டை - 97.88, தஞ்சாவூர் - 96.8

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 68.9, ஊட்டி - 67.28, வால்பாறை - 78.8

    • அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும்

    இந்தியாவில் நிலவி வரும் அதீத வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களின் உடலை நீரேற்றத்துடன் குளுமையாக வைத்துக்கொள்ள ஜூஸ்களையும் குளிரூட்டயப்பட்ட சாஃப்ட் ட்ரிங்ஸ்களையும் அருந்திவருகின்றனர். அதிலும் முக்கியமாக கரும்பு ஜூஸை அனைவரும் விரும்பி உட்கொள்கின்றனர்.

     

    இதனால் நகரங்கள் மற்றும் டவுன்களில் வீதிக்கு வீதி ஜூஸ் கடைகளும் கரும்புச்சாறு கடைகளும் முளைத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மக்களுக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

     ஆரோக்யமான உணவு முறை குறித்து ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் (NIN) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்புச்சாறு அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடபட்டுள்ளது.

     

    மேலும் அந்த அறிக்கையில், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும், பழத்தை ஜூஸ் போட்டு அருந்தும்போது பழத்தின் மொத்த சத்தில் 100-150 கிராம் அளவு சத்து மட்டுமே உடலில் சேரும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செயற்கை நிறமிகள் சேர்க்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கபடாத பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

     

    • டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.

    டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.

     

    ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.

    • மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது
    • தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

    இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்

    திருத்தணி - 108.5, மீனம்பாக்கம் - 107, வேலூர் - 107, மதுரை விமான நிலையம் - 104, நுங்கம்பாக்கம் - 104, பரங்கிப்பேட்டை - 104, மதுரை நகரம் - 104, புதுச்சேரி - 104, ஈரோடு - 104, நாகப்பட்டினம் - 103, கடலூர் - 103, திருச்சி - 102, தஞ்சாவூர் - 102, தொண்டி - 101, திருப்பத்தூர் - 101, காரைக்கால் - 101, கரூர் பரமத்தி - 100, தூத்துக்குடி - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    குன்னூர் - 76.64, கொடைக்கானல் - 71.6, ஊட்டி - 72, வால்பாறை - 78

      தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

      ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

      இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

      இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

      மே 4 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

      தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

      சென்னை மீனம்பாக்கம் - 106, சென்னை நுங்கம்பாக்கம் - 106, திருத்தணி - 104, வேலூர் - 104, திருப்பத்தூர் - 102, மதுரை நகரம் - 101, பரங்கிப்பேட்டை - 101, மதுரை விமான நிலையம் - 101, புதுச்சேரி - 101, நாகப்பட்டினம் - 101, தஞ்சாவூர் - 100, கடலூர் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

      சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

      குன்னூர் - 77, கொடைக்கானல் - 73.04, ஊட்டி - 73, வால்பாறை - 75.2

      ×