search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷங்கர்"

    • கேம் சேஞ்சர் டத்தில் மொத்தமாக 5 மணிநேர காட்சிகள் இருந்தது.
    • இதனால் படத்தில் பல நல்ல காட்சிகளை வெட்டி நீக்க வேண்டியிருந்தது.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.

    இந்நிலையில், இந்த படம் தொடர்பாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், "கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. படத்தில் மொத்தமாக 5 மணிநேர காட்சிகள் இருந்தது. இதனால் படத்தில் பல நல்ல காட்சிகளை வெட்டி நீக்க வேண்டியிருந்தது.

    இயக்குநர் ஷங்கரின் இந்தப் பேச்சு இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தமிழில் இங்கு வெளியிட மறுத்துள்ளது லைக்கா தயாரிப்பு நிறுவனம். ஷங்கர் இயக்கத்தில் இதற்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. வணீக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை. இத்திரைப்படத்தை தயாரித்தது லைக்கா நிறுவனம். இதனால் படத்தின் அடுத்த பாகமான இந்தியன் 3 திரைப்படத்தை எடுத்து தராமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்தியன் 3 திரைப்படத்தை படப்பிடிப்பு முடிக்க இன்னும் 65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
    • ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்நிலையில், இத்திரைப்படத்தின் 4வது சிங்கிளான 'தொப் {Dhop}' பாடல் நேற்று வெளியானது. இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    அப்படி ஒரு ப்ரோமோஷன் பணி நேற்று அமெரிக்காவில் நடைப்பெற்றது. அதில் பேசிய ஷங்கர் கூறியதாவது "எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
    • பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் தற்பொழுது நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்நிலையில், இத்திரைப்படத்தின் 4வது சிங்கிளான 'தொப் {Dhop}' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடனமாடியுள்ளனர். இப்பாடலின் காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக காட்சி படுத்தியுள்ளனர்.

    இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடம் இருந்து நிரைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.

    அதற்கெல்லாம் பதிலளிக்கும் படி சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றிம் இயக்குனர் ஷங்கர் பதிலளித்துள்ளார் அதில் அவர் " இந்தியன் 2 திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. இதனால் நான் என்னுடைய சிறந்த மற்றும் கடின உழைப்பை கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 திரைப்படத்திற்கு அளித்துள்ளேன். இந்தியன் 3 திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும். கேம் சேஞ்சர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ராம் சரணுக்கு மிகப்பெரிய கதாப்பாத்திரமாக அமைந்துள்ளது இப்படம். " என கூறியுள்ளார்.

    கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
    • கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம்

    ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் படம் "இந்தியன்". இந்த படம் கடந்த தொடர்ச்சியாக இந்தியன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலகம் முழுவதும் உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்தியன் தாத்தா தோற்றம் முதல், பிரியா பவானி சங்கர் நடிப்பு, ஷங்கர் இயக்கம் வரை இணையத்தில் கலாய்த்துத் தள்ளினர். இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலை இப்படம் பெற்றது.

    இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    ஆனால் இதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் உடன்படவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சில காட்சிகளை ஷூட் செய்து படத்தை தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று அவர்கள் உறுதியாக உள்ளார்களாம்.

    இந்தியன் 2 போல இந்தியன் 3 ஆகிவிடக்கூடாது என்பதால், அந்த கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம். எனவே தற்போது சங்கர் தான் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள கேம் செஞ்சர் புரமோஷன் பணிகள் முடிந்த உடன் இந்தியன் 3 ரீ - சூட் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

    இந்த ரீ - சூட்டிற்கு பட்ஜட்டாக 100 கோடி ரூபாய் வரை ஷங்கர் லைகாவிடம் கூறியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. கேம் செஞ்சர் அடுத்த வருடம் பொங்கலை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக திரைப்படம் இயக்குவதில் திறம் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஷங்கரிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ மற்றும் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷங்கர் " நான் லியோ திரைப்படம் பார்த்தேன். மிக நன்றாக இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஜவான் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அட்லீ செய்த மெனெக்கெடல், ஈடுபாடு, உழைப்பு தெரிகிறது அது என்னை பிரமிக்க வைக்கிறது. சாதாரணமாக எல்லாம் இந்த வெற்றி கிடைத்து விடாது. எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. என்னுடைய துணை இயக்குனர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளது. என் மகன் சாதித்து காமித்தால் எவ்வளவு சந்தோஷம் மற்றும் பெறுமை படுவேனோ அதேப்போல் தான் இதுவும்" என கூறியுள்ளார்.

    அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் நடிகர் விஜய் நடிப்பில் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா' பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
    • இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ஷங்கர் ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 ஆகிய திரைப்படங்களில் இயக்கி வருகிறார்.

    இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " பல திரைப்படங்களில் சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை கண்டு, அந்த நாவலின் உரிமத்தைப் பெற்றவனாக கலக்கமடைகிறேன். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் நாவலின் முக்கியமான காட்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். திரைப்படங்கள். வெப் சீரிஸ் என எதிலும் நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக படத்தின் அடுத்த பாடல் இந்த மாதம் வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இந்த படம் டிசம்பர் மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ளகிறார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் புது அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
    • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து 'இந்தியன் 2' விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×