என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "100 day work"
- 100 நாள் வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்குவதால் அடிப்படைத் தேவை களுக்கு உதவியாக இருக் கும் என மத்திய மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நேரமாகும். இதனால் காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வர தாமதமாகிறது. மேலும் மாலை 5 மணிக்கு வேலை முடிந்தால் வீட்டுக்கு செல்ல 7 மணி ஆகி விடுகிறது.
அதன் பின்னர் வீடுகளுக்கு உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே 100 நாள வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற குழுவினரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
- எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாம்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஏழைஎளிய மக்களுக்காக 100 நாள் வேலைதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2009-ம் ஆண்டு 247 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாள் வேலைதிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரு கின்றனர்.
தற்போது இப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் பணி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழைய கணக்கெடுப்புபடியே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திர மடைந்த கிராம பெண்கள் குப்பாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி யாளர்கள் வேலை செய்த இடத்தில் முற்றுகையிட்ட னர்.
அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடு கள் நடைபெற்று வருகிறது.
எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். இருந்தபோதும் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர்.
- பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டில் உள்ள பெண்களுக்கு சரிவர மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை. இதனை யடுத்து இன்று காலை அந்த பகுதி 5,6-வது வார்டு பெண்கள் அனைவரும் சேர்ந்து ஊரக வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வானூர்- காட்ராம்பாக்கம் சாலையில் திடீரென மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிடிஓக்கள் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி பெண்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.
- திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை.
- திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமை யிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விழுப்புரத்தில் கள ஆய்வு செய்கிறார். பெரும்பாலான அதிகாரிகள் அங்கு சென்று விட்டனர். அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் பேசி உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.
மேலூர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.
இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
- 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலூர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.
இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்திற் குட்பட்ட அலகரை ஊராட்சி கோடியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும். சுமார் 11 மாதங்களாக எந்த வேலையும் வழங்காததால் பெரும் அவதிபட்டு வருவதாக கூறி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது பற்றி தகவலறிந்த தொட்டியம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலரும் ஆணையருமான செந்தில் குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அலகரை ஊராட்சி கோடியாம்பாளையத்தில் வாய்க்கால் தூர் வாரும் பணி, மண் வரப்பு அமைக்கும் பணி, கசிவு நீர் குட்டை வெட்டும் பணி, சாலை அமைக்கும் பணிகளுக்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் நிர்வாக அனுமதி பெற்று ஒரு வார காலத்திற்குள் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.கிராம மக்கள் முற்றுகை போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #VillagersSiege #Ruralworkplan