search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youths arrest"

    தேன்கனிக்கோட்டை அருகே தையல் தொழிலாளி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவரபெட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் சசிக்குமார் (வயது 23).

    இவர் தளியில் மைசூரு சாலையில் தையல் கடை நடத்தி வந்தார்.

    கடந்த 31-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை ராஜப்பா நேற்று முன்தினம் தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தளி அருகே மதகொண்டபள்ளி- பின்னமங்கலம் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முட்புதரில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தளி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து தளி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரித்ததில் இறந்தவர் மாயமான தையல் தொழிலாளி சசிக்குமார் என்பது தெரியவந்தது.

    அவரை சிலர் இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.

    அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சசிக்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகில் ஏரியில் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் வசிக்கும் மல்லேஷ் குடும்பத்தினருக்கும், சசிக்குமார் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மல்லேஷூம் அவரது நண்பர்களும் சேர்ந்துதான் சசிக்குமாரை கடத்தி கொடூர கொலை செய்தது தெரியவந்தது.

    உடனே மல்லேஷை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அவர் தளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதுக்கி இருந்தது போலீசார் தெரியவந்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று மல்லேஷையும், அவரது நண்பர் சசிக்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் தையல் தொழிலாளி சசிக்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    கைதான மல்லேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

    எங்களது குடும்பத்திற்கும், தையல் தொழிலாளி சசிக்குமார் குடும்பத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. சசிக்குமாரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன்.

    மேலும் எங்களது பகுதியில் நான் காதலிக்கும் பெண்ணை சகிக்குமார் காதலிப்பதாக தெரியவந்தது. அவர் மீது மேலும் கொலை வெறி அதிகரித்தது.

    கடந்த 31-ந் தேதி ஆனேக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தையல் தொழிலாளி சசிக்குமார் சென்றதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தார் அப்போது அவரை நானும், எனது நண்பர் மற்றொரு சசிக்குமார் என்பவரும் சேர்ந்து கொண்டு பின்னமங்கலம் பகுதியில் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினோம். பின்னர் அவரை அரிவாளல் கழுத்து பகுதியில் வெட்டினேன்.

    அவர் இறந்ததை அறிந்த நாங்கள் உடலை பின்னமங்கலம் ஏரிகரை பகுதியில் உள்ள முட்புதரில் உடலை வீசிவிட்டு அவர் வந்த மோட்டார் சைக்கிளை ஏரியில வீசிவிட்டு சென்றோம். நாங்கள் தளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதுக்கி இருந்தபோது எங்களை போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சங்கரப்பா, முரளி ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். #tamilnews
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மணல் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், மொவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் மொவூர் பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முட்டம் மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து மணல் எடுத்து வருவதாக ரசீதை காட்டினர். அந்த ரசீதை போலீசார் வாங்கி பார்த்தனர். அப்போது அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.

    இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மொவூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), ஓமாப்புலியூர் பகுதியை சேர்ந்த தீபக்கணேஷ் (25) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் தனியார் ஏ.டி.எம். உள்ளது. இங்கு கடந்த 27-ந் தேதி 2 பேர் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தனர்.

    பணம் வராததால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி சென்று விட்டனர். இந்த காட்சி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து வங்கி மேலாளர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வந்தனர். விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த கண்ணூர் கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல். அவரது நண்பர் மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஆற்காடு:

    சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

    வேலூர் மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது ஆற்காடு லேபர் தெருவை சேர்ந்த அஜித்குமார் (வயது 22), மணி (30) மற்றும் சிலர் சுற்றுலா பயணிகளுடன் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளனர். மேலும் நவநீதம் (20), சரவணக்குமார் (32), தினேஷ் (19), தாஸ் (28) ஆகிய 4 பேரை கத்தியால் குத்தி உள்ளனர். அதில் காயமடைந்த அவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து யுவராஜ் என்பவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், மணி ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #Tamilnews
    ×