search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youths arrested"

    • வெவ்வேறு சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.

    மதுரை

    மதுரை சர்வேயர் காலனி பாண்டியன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் சவுந்தரபாண்டியன் (வயது40). இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மர்ம நபர்கள் அதனை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருப்பாலை போலீசில் சவுந்தர பாண்டியன் புகார் செய்தார். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது உச்சபரம்புமேடு மாமா நகர் முதல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விவேக் ராஜா (27) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலூர் சத்தியமூர்த்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி (41). இவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அண்ணாநகர் யாகப்பாநகர் 3-வதுதெரு மாரி மகன் காளீஸ்வரன் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 44). இவர் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு செல்ல செம்பாக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.பஸ் நிலையத்தில் அய்யப்பன் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் அய்யப்பனின் பின் பாக்கெட்டில் இருந்த ரூ.600 பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அய்யப்பன் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள், தப்பியோடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பணத்தை பறிமுதல் செய்து அய்யப்பனிடம் கொடுத்தனர்.

    மேலும், 2 வாலிபர்களையும் கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு (வயது 35), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பதும் தெரியவந்தது.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்து தப்பி ஓட முயன்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 47). கால் டாக்சி டிரைவர். சம்பவத்தன்று இவர் மூலக்கடை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் ராஜூவை தடுத்து நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி பணம் கொடுக்கும்படி மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ராஜூவின் பாக்கெட்டில் இருந்த ரூ. 3 ஆயிரம் பணத்தை பறித்து தப்பி ஓட முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் மதன்குமார் என்ற மில்கி (25), காமராஜர்புரத்தை சேர்ந்த மூவேந்திரன் (25) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டி ல் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சிறப்பு பிரிவினர் ரோந்து சென்றனர். அப்போது ரெயில்நிலையம் எதிரே காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் மண்டபம் மாரீஸ்வரன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    அவரது ெகாடுத்த தகவல்படி ேபாலீசார் மண்டபம் பிரதீப் (20), சதீஷ்குமார் (30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சதீஷ்குமார் என்பவர் இறால் ஏற்றுமதி நிறுவனம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார்.

    சிவகிரி, 

    ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் விளக்கேத்தி மற்றும் எல்லக்கடை பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    சிவகிரி- எல்லப்பாளை யம் ரோட்டில் போலீசார் சென்ற போது ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அருகே சென்று பார்த்தார். அங்கு 2 பேர் மது குடித்து கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார். மேலும் அவர்களிடம் வேனின் ஆவணத்தையும் கேட்டார்.

    இதையடுத்து மது குடித்து கொண்டு இருந்த 2 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் 2 பேர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர்கள் சிவகிரி அருகே உள்ள கொந்தளம் புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன் ரஞ்சித் (22) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் ஓட்டி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.
    • போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து கைது செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை மாநகரில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற 35-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ேபாலீசார் மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் சிலர் திருட்டு தனமாக வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மாநகர போலீசாருக்கு குனியமுத்தூர் சதாம் நகரில் உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து குனியமுத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த டி.ஏ.எச். காலனியை சேர்ந்த ஜியாவூதீன் (வயது 31), செந்தமிழ் நகரை சேர்ந்த பெயிண்டர் சத்தியமூர்த்தி (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த 27 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • செல்வகுமார் (வயது 42). மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் . போது 2 பேர் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் சிதம்பரத்தில் உள்ள டிபன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    அப்போது ஓமக்குளம் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முகேஷ் கண்ணன் (23), வைப்புசாவடி சபாநாயகர் தெருவை சேர்ந்த ஆகாஷ் (18) ஆகிய 2 பேரும் செல்வகுமாரை வழிமறித்து தாக்கினர். மேலும், மோட்டார் சைக்கிளை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    • 15 பவுன் நகை, ரூ.10ஆயிரம் ரொக்கம் கொள்ளை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 68) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 15 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல அருகே உள்ள வெங்கடேசன் கட்டிட மேஸ்திரி என்பவர் வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுக்கா போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளையடித்த சம்பவத்தில் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த சுஹால் ( 28) மற்றும் உமராபாத் கைலாச கிரி நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த முஜாத் (28) ஆகியோர் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது.

    இதனையடுத்து இன்று காலை ஆம்பூர் டி.எஸ்.பி.சரவணன் தலைமையில் போலீசார் இவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்து அவர்களிடம் நகை பணத்தை மீட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய வருகின்றனர்.

    • விஜயசென் (வயது 22), அவரது நண்பர்பைசல் ரஹ்மான் (19) கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸாருக்கு தகவல் வந்தது,
    • 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர் நகருக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்த விஜயசென் (வயது 22), அவரது நண்பர் அம்மன் கோவில்பத்து, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பைசல் ரஹ்மான் (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அதில் 2 வாலிபர்கள் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் யார் என அடையாளம் கண்ட போலீசார் அவர்களை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இந்நிலையில், தலைமறைவாக இருந்த கொல்லப்பட்றையை சேர்ந்த தமிழரசன் ( 21), கார்த்தி என்ற கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், கூலி தொழிலாளி கண்ணனிடம், வாலிபர்கள் இருவரும் தீப்பெட்டி கேட்பது போல் நடித்து, அவரை தாக்கி கண்ணனிடம் இருந்து பணத்தை திருடி சென்று உள்ளனர். இதனால் கண்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு உள்ளது. இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பெத்திக்குட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமுகை போலீசார் பெத்திக்குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த குடில் மகன் ஹரிபிரதாப் (வயது20), பவானிசாகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் கருப்புசாமி (வயது27) ஆகிய 2 பேரும் சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம், டிச.2-

    அரக்கோணம் சுவால்பேட்டை, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சந்தேகம் படும்படியாக நின்றிருந்த 2 வாலி பர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    ×