என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூலி தொழிலாளி கொலையில் 2 வாலிபர்கள் கைது
- மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.
சேலம்:
சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அதில் 2 வாலிபர்கள் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் யார் என அடையாளம் கண்ட போலீசார் அவர்களை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த கொல்லப்பட்றையை சேர்ந்த தமிழரசன் ( 21), கார்த்தி என்ற கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், கூலி தொழிலாளி கண்ணனிடம், வாலிபர்கள் இருவரும் தீப்பெட்டி கேட்பது போல் நடித்து, அவரை தாக்கி கண்ணனிடம் இருந்து பணத்தை திருடி சென்று உள்ளனர். இதனால் கண்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு உள்ளது. இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.