என் மலர்
நீங்கள் தேடியது "கே.ஜி.எப்.2"
- இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீல கிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது. அணை க்கு நேற்று வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலை யில் இன்று 2,294 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 500 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும்,
கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.
அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.90 அடியாகவும்,
பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 18.99 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.
- மொடக்குறிச்சி வட்டாரதில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- விவசாயிகள் தேர்வு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஈரோடு:
நல்ல தரமான விதைகள் மட்டுமே நல் விளைச்சலுக்கு ஆதாரம். தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்ற டைய வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி மொடக்குறிச்சி வட்டாரதில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், விதைஇருப்பு, விதைக் கொள்முதல் பட்டியல்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை பட்டியல்கள், விலைப்பட்டி யல் பலகை, முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கைகள், விற்பனை அனுமதிச்சான்று நகல்கள், விதை விற்பனை உரிமங்கள் போன்ற அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யபட்டது
இந்த ஆய்வின் முடிவில் விதைச்சட்டம் 1966 கீழ் வீதிமீறல் காணப்பட்ட காரணத்தால் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,300 கிலோ விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.82,660 ஆகும்.இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
விவசாயிகள் விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே விதை களை வாங்க வேண்டும் எனவும், விதைகள் வாங்கும் போது தவறாமல் விற்பனை பட்டி யல் கேட்டு பெறவேண்டும்.
மேலும் காலாவதி தேதி, விதை குவியல் எண் போன்ற விவரங்கள் கவனித்து வாங்க வேண்டும்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யால் பரிந்துரைக்ப்பட்ட பருவத்திற்கேற்ற பகுதிக்கேற்ற ரகங்கலையே விவசாயிகள் தேர்வு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு விதை ஆய்வாளர் நவீன் உடனிருந்தார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.37 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.37 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 762 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 2,300 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது.
காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.50 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.39 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியாகவும் உள்ளது.
- சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது.
- பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, அக். 21-
ஈரோடு கொல்லம் பாளையம்-சோலார் பிரிவு அருகே இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த வாகனத்தில் 4 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சத்யராஜ், விக்னேஷ், உதயகுமார், செல்வம் என தெரிய வந்தது.
சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 42 பெட்டிகளில் 2,016 மது பாட்டில்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மதுவிலக்கு போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது
- கலை திருவிழாவில் 9 வகைகளாக 64 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்
சென்னிமலை,
மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொணரும் வகையில் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலும், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகு ப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மற்றும் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கடந்த 2 நாட்களாக 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது.
போட்டியினை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) ஜோதி சந்திரா தலை மையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.
கலை திருவிழாவில் 9 வகைகளாக 64 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் சென்னிமலை வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் கோபிநாதன், வட்டார கல்வி அலுவலாகள் ராஜேந்திரன், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
- வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.
அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.

- ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்ப ட்டது. பின்னர் மழைப்பொ ழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 2,800 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து ள்ளது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.04 அடியாக உள்ளது.
30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.
- 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) இன்று காலை தொடங்கியது.
- சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது.
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -4 பிரிவில் காலியாக உள்ள செயல் அலுவலா் நிலையில் உள்ள 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) இன்று காலை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 6 மையங்களில் காலை, மாலை இரு கட்டங்களாக தமிழ் தோ்வும், பொது அறிவுத் தோ்வு நடைபெற்றது.இதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -3 பிரிவில் காலியாக உள்ள 42 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப் 7பி) நேற்று தேர்வு நடைபெற்றது. காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெற்றது.
இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது. இதில் 4387 பேருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2350 பேர் தேர்வு எழுதினர். 2,052 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்
குடியாத்தம்:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது.
75 மாணவிகள் கலந்து கொண்ட இந்த பாரதமாதா உருவப்படம் 40 அடி அகலத்திலும் 50 அடி நீளத்திலும் சுமார் எட்டு மணி நேரம் பணியாற்றி வரைந்தனர்.
சிறப்பாக பாரதமாதா உருவப்படத்தை வரைந்த மாணவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீலி கிறிஸ்டி, நகர மன்ற உறுப்பினர் ஜாவித் அகமது, அபிராமி கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.
மாணவிகள் வரைந்த பாரதமாதா உருவப்படத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து பாராட்டி வருகின்றனர்.
- வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ப ட்டுள்ள தாகவும்,லிங்கை தொடர்புகொண்டு அப்டேட் செய்யும்படி எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
- வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 538 எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
சேலம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் திலக்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதி அக்தர் உசேன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலிமுல்லா (வயது 20) சேலத்தில் பதுங்கி இருப்பதும், அவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் நடத்தி வரும் எருமாபாளையம் குட்டப்பன்காட்டில் உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் (கார்மெண்ட்ஸ்) வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், சேலத்திற்கு வந்து அப்துல் அலிமுல்லாவை கைது செய்தனர். மேலும் அவருடன் வேலை பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோரிடம் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலத்தில் பிடிபட்ட அப்துல் அலி முல்லா சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத தாக்குதல் காட்சிகள் உள்பட பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள பெங்களூரு போலீசார், அப்துல் அலி முல்லாவை சேலம் அழைத்து வந்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சேலத்தில் புதியதாக வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் குறித்த தகவலை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.