என் மலர்
நீங்கள் தேடியது "200 வீரர்கள்"
- 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை
- குஜராத்தில் தேசிய அளவிலான போட்டி நடந்தது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வாலிபருக்கு பிகே ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தென்னரசு சாம்ராஜ் என்பவரின் மகன் விஷால் கடந்த 3ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த விஷால் என்பரை பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டையில் விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ள பிகே ஸ்போர்ட்ஸ் சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற்று நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் விஷாலுக்கு பாராட்டு விழா நடத்தினார்.
நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர் மதன்குமார், ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சி மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டில் மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஏலத்தில் ‘டேக்கிள்’ செய்வதில் சிறந்தவரான நீரஜ் குமார் அதிக விலைக்கு போனார். அவரை வாங்க பெங்கால், குஜராத், அரியானா, பாட்னா, தமிழ் தலைவாஸ் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் அவரை ரூ.44.75 லட்சத்துக்கு பாட்னா பைரட்ஸ் அணி வாங்கியது.
விகாஸ் காலே (அரியானா) ரூ.34.25 லட்சத்துக்கும், நவீன் (அரியானா) ரூ.33.5 லட்சத்துக்கும், அஜித் (தமிழ் தலைவாஸ்) ரூ.32 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். தமிழகத்தை சேர்ந்த கே.செல்வமணி ரூ.16.05 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதேபோல் மற்றொரு தமிழக வீரர் சி.அருணை ரூ.10 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி சொந்தமாக்கியது
தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர், மன்ஜீத் சில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகியோர் தக்க வைக்கப்பட்டு இருந்தனர். ஏலத்தின் மூலம் ஹிமான்சு, அபிஷேக், ராகுல் சவுத்ரி, ரன் சிங், மொகித் சில்லார், அஜித், மிலாட் ஷேபக், ஷபீர் பாபு, யஷ்வந்த் பிஸ்னோய், வினித் ஷர்மா ஆகிய வீரர்களை தமிழ் தலைவாஸ் அணி தனதாக்கி உள்ளது. கடந்த 2 நாள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 12 அணிகளும் சேர்ந்து மொத்தம் 200 வீரர்களை (173 பேர் உள்ளூர், 27 பேர் வெளிநாட்டினர்) ரூ.50 கோடிக்கு வாங்கி இருக்கின்றன.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள், அங்கு 8 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இப்படி அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற மருத்துவ குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை மந்திரி ஒளி இலுங்கா கூறினார்.
காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார். #EbolaVirus #Congo
பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், இவரது மனைவி சுகன்யா இவர்களது மகன் ஹரி சரண் (வயது 4) இவன் பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான்.
பெற்றோர்களிடம் கல்வி கற்று வந்த சிறுவன் ஹரிசரனை கடந்தாண்டு பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் ப்ரி கே.ஜி.யில் சேர்த்தனர்.
இவனது அபார திறனை வியந்தபள்ளி ஆசிரியைகள் சிறுவன் ஹரிசரணுக்கு தூண்டுகோலாக இருந்தனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய விஷயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்து வந்தனர். 2 வயதில் தொடங்கிய இவனது நினைவாற்றல் தற்போது 4 வயதில் அசத்தும் வகை பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி வருகிறான்.
கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள 200 உலக நாடுகளின் தேசிய கொடிகளை சுட்டிகாட்டி அவை எந்த நாட்டிற்கான கொடி என்று கேட்டால் கடகடவென வரிசையாக உலக நாடுகளின் பெயரை சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளான். இது மட்டும் இல்லாமல் கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்துகிறான்.
ஹரிகரணின் அசத்தல் இதோடு மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் பெயர், தலைநகரம் ஆகியவையும் கூறி வருகிறான். தேவாரம், திருவாசகம் பாடல்களையும் மழலை மொழியில் பாடி அசத்தும் ஹரிசரணை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனர். சிறுவன் ஹரிசரணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இது பற்றி ஹரிசரணின் தாயார் சுகன்யா கூறியதாவது:-
மாணவன் ஹரிசரண் படிப்பில் படுசுட்டி. படிப்பில் இவனுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்து இவனது ஆர்வத்தை தூண்டும் வகையில் இவனது படிப்பில் தனிகவனம் செலுத்தி வந்தோம்.
ஹரிசரணுக்காக டி.வி. பார்ப்பதை தவிர்த்தோம். உலக நாடுகள் பெயர், அந்தந்த நாடுகளின்கொடி, சின்னம், தலைநகர் பெயர் ஆகியவைகளை பார்த்து படிக்க ஆரம்பித்தான். 2 வயதிலேயே 100 நாடுகளின் பெயர், கொடி ஆகியவை காண்பித்து சொல்ல தொடங்கினான். இப்போது 200 நாடுகளின் கொடியை காண்பித்து இது எந்தநாட்டு கொடி என்று கேட்டால் உடனே அந்த நாட்டின் பெயரை சொல்லும் அளவிற்கு சிறு வயதிலேயே ஞாபகசக்தியில் சிறந்து விளங்கி வருகிறான்.
இவ்வாறு அவர் கூறினார். #PanrutiUKGStudent
பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ருவாண்டா அதிபர் பால் ககமே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்தார். இப்போது பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு சென்று இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். ருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
ருவாண்டா அரசு, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் இலவசமாக 200 பசுக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பசுக்களை வழங்குகிறார்.
ருவாண்டாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) உகாண்டா செல்லும் பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.
பின்னர் உகாண்டாவில் இருந்து நாளை தென் ஆப்பிரிக்கா செல்லும் மோடி அங்கு 27-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் 10-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ராமபோசாவை சந்தித்து பேசுகிறார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Rwanda #Cow #Modi #tamilnews