search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd day"

    • ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.
    • மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் இன்று முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதலே வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதல் தீபாவளியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் பிற மாவட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ெரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பட்டாசு கொண்டு செல்லப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் ரெயில்வே போலீசார் பயணிகள் உடை மைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா என்று உடைமைகளை சோதனை செய்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும்.

    இதனை தடுக்கும் வகையில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேக ப்படும் சில நபர்களை பிடி த்து விசாரணை நடத்திய அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயணி களின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.

    இதேபோல் ஈரோட்டுக்கு வரும் ஒவ்வொரு ரெயில்க ளில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். மேலும் பயணி களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினர்.

    ெரயில் பயணத்தின் போது யாரும் சாப்பிட எது கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிடக்கூடாது. அதிக நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    இரவு நேரத்தில் தூங்கும் போது ஜன்னலை மூடி விட்டு தூங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய நோட்டீசையும் வழங்கினர்.

    இன்று வழக்க த்தை விட ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்ட தால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    • ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.
    • திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெ யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்த தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. மாலை திடீரென வானங்களில் கருமேகங்கள் சூழ்ந்து முதலில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    அதன் பிறகு நேரம் செல்ல சொல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேர ம் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளின் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்த சூழ்நிலையில் மழை பெய்த தால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மொடக் குறிச்சியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதுபோல் எலந்தகுட்டை மேடு, கவுந்தப்பாடி, கொடுமுடி, குண்டேரி பள்ளம், தாளவாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    மொடக்குறிச்சி-46, எலந்தகுட்டைமேடு-44, கவுந்தப்பாடி-41.20, ஈரோடு-20, கொடுமுடி-14.20, குண்டேரிபள்ளம்-10, தாளவாடி-8, பவானி-6.40, சென்னிமலை-2.

    • கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிர்வாகியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
    • பழனியில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மதுரை மண்டல தலைவராக இருந்தவர்.

    இவர் நேற்று தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்கு வரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணை நேற்று மாலை 6 மணிவரை நீடித்த நிலையில் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று 2வது நாளாக முகமதுகைசரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளா, தெலுங்கானா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரேனும் இவரிடம் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பழனியில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 2-வது நாளாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கினர்.
    • ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம் ரூ.1,000 ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. வரும் 9-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெற கூட்ட நெரிசலை தவிர்க்க, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வீடு, வீடாக சென்று அக்கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதில் பரிசு தொகுப்பு பெற வர வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவிக்கின்றனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கினர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகி ஜான் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 7 லட்சத்து 65,845 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் அரிசி கார்டு தாரர்கள் 7 லட்சத்து 47,474 பேர் உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கம் வகையில் நேற்று முதல் வீடுவீடாக ரேஷன் கடை ஊழியர்கள் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் வினியோகத்தை தொடங்கி வைத்த பின் இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டோக்கன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு சராசரி தினக்கூலியாக ரூ.490 என்ற அடிப்படையில் கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை ரூ.360 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் இவர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கக்கூடிய ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தூய்மை பணியாளர் னளுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து நேற்று மாலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
    • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் 2-வது நாளாக கடைகள் அகற்றப்பட்டன.
    • ேகாவில் வளாகத்தில் செயல்பட்ட கடைகளில் பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்கி வந்தனர்.

    மதுரை

    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இந்த நிலையில் கோவில் வளாகத்தில் செயல்பட்ட கடைகளில் பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்கி வந்தனர். கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது

    இந்த தீ விபத்துக்கு அங்கு செயலபட்ட கடைகள் ஒரு காரணம் என தெரியவந்ததால் அவை களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முதல் கோவில் வளாகத்தில் செயல்பட்ட கடைகளை அகற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக கடைகள் அகற்றப்பட்டன. மொத்தம் 60 கடைகள் அகற்றப்பட்டன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதியில் காலி செய்யப்பட்ட கடைகளின் பெட்டி உள்பட தளவாட சாமான்கள் உள்ளது. எனவே அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 12 கடைகளின் உரிமை யாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். எனவே அந்த கடைகளை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை காலி செய்யக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    ×