என் மலர்
நீங்கள் தேடியது "2nd marriage"
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.
இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார்.
சமீபத்தில் மாஸ்கோவில் செய்தியாளர்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட புதினிடம் நிருபர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு ‘‘நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என புதின் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார். #VladimirPutin #LyudmilaPutina
திருமங்கலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகள் செல்விமீனா (வயது 26). இவருக்கும், பரவை எஸ்.எம்.பி. நகரைச் சேர்ந்த சந்திரன் மகன் பாண்டி முருகன் (34) என்பவருக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்விமீனா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியபின்கடந்த ஆண்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மனைவியை பிரிந்திருந்த காலத்தில் பாண்டிமுருகன் விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் குருலட்சுமி (21) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
இதை அறிந்த செல்வி மீனா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த பாண்டிமுருகனை கைது செய்தனர். அவரது தாய் வசந்தி, குருலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரம்ஜத்பேகம் (வயது 27). இவரும் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஓட்டல் நடத்திவரும் பெரோஸ்கான் (29) என்பவரும் கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் காதல் பதிவு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.
இந்தநிலையில் பெரோஸ்கான் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ரம்ஜத்பேகத்தை துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரம்ஜத் பேகம் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் பெரோஸ்கான் 2-வது திருமணம் செய்துள்ளார்.
இதற்கு அவரது குடும்பத் தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது தெரியவந்ததும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் ரம்ஜத் பேகம் புகார் செய்தார். அதில் 25 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாகவும் தனக்கு தெரியாமல் கணவர் 2-வது திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பெரோஸ்கான், அவரது தந்தை ரகுபுதீன், தாய் செய்யது அலி பாத்திமா, உறவினர்கள் ஜெப்ரி, தாவீத், அனீபா, பபீதா, யூசுப்,பாத்திமா ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.