என் மலர்
நீங்கள் தேடியது "3டிமாஸ்க்"
- ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.
- இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் இன்று 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.
இந்நிலையில் இன்று காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
71 வாகனங்கள் முகாமிற்கு பயன்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
- தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ம் கல்வி–யாண்டில் கடந்த ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்- 18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்ப–வர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர்.
இதேபோல் பெருந்துறை, பவானி கோபிசெட்டி–பாளையம், சத்தியமங்கலம், ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் பட்ட–தாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர். குறிப்பாக பெண் பட்டதாரிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்து சென்றனர்.
சிலர் தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
இதில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி பணிகளில் மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 71 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
- மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் என 917 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் 140 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 777 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல், 2-ம் தவனை தடுப்பூசிகள் போடப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து ஊசிபோட்டு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 2009 நிலையான தடுப்பூசி முகாம்கள், 135 தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 2,144 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்கள் தடுப்பூசி போட்டு சென்றனர்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகர பகுதியில் சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வங்கிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதியத்திற்கு பின்பு வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்று மாநகர பகுதியில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
- இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளா தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- மக்கள் ஆர்வமுடன் வந்து செலுத்திக்கொண்டனர்
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது
கோவை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 10 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் தற்போது வரை 18 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியை 27 லட்சத்து 82 ஆயிரத்து 999 நபர்களும், 2-வது தவணை தடுப்பூசியை 25 லட்சத்து 83 ஆயிரத்து 749 நபர்களும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 4 ஆயிரத்து 494 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 76 ஆயிரத்து 531 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 44 ஆயிரத்து 302 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கி ழமை) சிறப்பு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 2,304 முகாம்கள், மாநகராட்சி பகுதியில் 950 முகாம்கள், நகராட்சிப்பகுதி களில் 225 முகாம்கள் என மொத்தம் 3,509 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தது.
தடுப்பூசி செலுத்தாத வர்கள் மற்றும் 2-வது தவணை தடுப் பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகியவை முகாம்களில் செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.
எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர்.
ஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி மாஸ்க்குகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயற்கை மாஸ்க்குகள் குறித்து ரியல்-எப் நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா கூறியதாவது:
இதுவரை செயற்கை முகவடிவ மாஸ்க்குகள் 2டியில் மட்டுமே உள்ளன. இதற்கு போதிய தொழில்நுட்பம் இல்லாததே காரணம் ஆகும். செயற்கை மாஸ்க்குகள் வடிவமைப்பில் 3டி மிகவும் சவாலான ஒன்றாகும். இந்த 3டி மாஸ்க்குகள் விளம்பரத்திற்கும், மார்க்கெட்டிங் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விளம்பர நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இசை விழாக்கள் போன்றவற்றில் இசையமைப்பாளர்கள் இதனை உபயோகிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்த மாஸ்க்குகள் முகஅமைப்பு மறுபயன்பாட்டு தொழில்நுட்பத்தின் சமீபத்திய தயாரிப்பாகும்.

இதனையடுத்து பிளாஸ்டிக் முக அமைப்பின் மீது 2டி புகைப்படம் பொருத்தப்படும். இது உறுதியான பிளாஸ்டிக் கொண்டு செய்யப்படுவதால் அசைக்க முடியாததாகும். 3டி பிரிண்டரில் பிரிண்டிங் செய்யப்படுகிறது. இந்த 3டி பிரிண்டர்களில் சில சிரமங்கள் ஏற்படும் போது மாஸ்க்குகள் கைகள் கொண்டு நுணுக்கமாக வரையப்படுகிறது. இதுபோன்ற மாஸ்க்குகள் மருத்துவத்துறையிலும், மனித உருவில் உருவாகும் ரோபோக்களுக்கு பொருத்தவும் பயன்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #japanfacemask #hyperrealistic


