என் மலர்
நீங்கள் தேடியது "7 கட்டமாக தேர்தல்"
- கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.
- தேனியில் அனைத்து வங்கிகள் சார்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
- 53 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தேனி :
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து வங்கிகள் சார்பில் நடத்தப்பட்ட கடன் உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற கடனுதவிகள் வழங்கும் விழாவின் மூலம் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு 13 பயனாளிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும்,
பல்வேறு தொழில்கள் தொடங்கிட 21 பயனாளிகளுக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், தனிநபர் கடனுதவியாக 19 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி கடனுதவிகளையும் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே போராட்டம் நடத்த வந்தவர்களிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இருப்பினும் அக்கட்சி நிர்வாகிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்து மகா சபா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து,அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது வழியிலான தற்போதைய அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து வருவதோடு, கூடுதல் திட்டங்களையும் மக்களுக்கு அளித்து வருகிறது.
இதன் காரணமாக அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், நடக்க இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
அ.தி.மு.க.வில் நல்ல சூழ்நிலை நிலவி வருகிறது. மறு வாக்குப்பதிவு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து தமிழக ஆளுநரை தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த புகார் உள்ளது. இதனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், பா.ஜனதா மீதான மக்கள் அதிருப்தி, அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.
உங்கள் யூகங்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என ஓ.பி.எஸ். கூறிச் சென்றார். #RajivGandhiAssassinationcase #OPS
திங்கள் அன்று தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சியின் சார்பில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #spuriousliquor
தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள கோடட் நகரை சேர்ந்தவர்கள் ஒரு ஆட்டோவில் தம்மரா கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினர். அவர்களது ஆட்டோ கோடட் பகுதியில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் முன்னால் சென்ற ஒரு லாரியை வேகமாக முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். காயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #AndhraAccident