என் மலர்
நீங்கள் தேடியது "75th independence day"
- ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட குன்னூர், இந்திராநகர், பிச்சம்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இல்லங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.
- பொதுமக்கள் தங்களது வீடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
தேனி:
75-வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட குன்னூர், இந்திராநகர், பிச்சம்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இல்லங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மத்திய, மாநில அரசுகளின் அறிவுரையின்படி, 75-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழா தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து தமிழகமெங்கும் நாட்டுப்பற்றினை பறைசாற்றும் விதமாக பொதுமக்களின் பங்களிப்புடன் கொண்டாடிடும் வகையில், தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், அரசு சார் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 3 நாட்களுக்கு தேசிய கொடியினை ஏற்றிடும் வகையில். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் இல்லங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களது வீடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
- கர்நாடகா சட்டப்பேரவைக்கு மூவர்ண விளக்குகளால் அலங்காரம்.
- வைதர்ணா அணை தண்ணீர் மூவர்ண லேசர் விளக்குகள் மின்னுகிறது.
நாட்டின் 75வது சுந்திர தின கொண்டாட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளன.

இது பர்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணை மூவர்ணங்களால் ஒளிருகிறது.
#WATCH | Maharashtra: As a part of #AzadiKaAmritMahotsav & #HarGharTirangaCampaign, Ujani Dam in Solapur district illuminated in tricolours
— ANI (@ANI) August 13, 2022
(Source: District Information Office, Pune) pic.twitter.com/sbOczHCsoh
பெங்களூருவில் உள்ள கர்நாடகா மாநில சட்டப்பேரவையான விதான் சவுதா கட்டிடம் மூவர்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
#WATCH | Karnataka: Vidhan Soudha in Bengaluru lights up in tricolours ahead of the #IndependenceDay pic.twitter.com/O75sHrsDLR
— ANI (@ANI) August 13, 2022
இதேபோல் அசாம் தலைமைச் செயலகம், கவுகாத்தி உயர்நீதிமன்றம், டெல்லி குதும்பினார், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை உள்ளிட்டவையும் விளக்குகள் அலங்காரத்தில் மின்னுகிறது.சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
#WATCH | Maharashtra: Vaitarna Dam, one of the sources of drinking water to Mumbai, adorned in tricolours to mark #75YearsofIndependence
— ANI (@ANI) August 13, 2022
(Source: BMC) pic.twitter.com/B4gjunfAKq
மும்பையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வைதர்ணா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூவர்ண லேசர் விளக்குகள் மின்னுகிறது.
- பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
- இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை:
நெல்லை மாநகரின் மையப்பகுதியில் வண்ணார் பேட்டை அமைந்துள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பலர் கூலி தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். அவர்களது குழந்தைகள் அப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அங்கன்வாடி பள்ளியில் தங்களது தொடக்கப்பள்ளி படிப்பை படித்து வந்தனர்.
தற்போது அந்த பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. தற்போது அந்த பள்ளியில் 40 குழந்தைகள் வரை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பல்வேறு இடங்களில் கோரிக்கை வைத்தனர்.
தற்போது 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி முழுவதும் சிதலமடைந்த இடங்கள் புதுப்பிக்கப்பட்டு வகுப்பறை, சுற்றுச் சுவர், கரும்பலகை உள்ளிட்டவைகள் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் ஓவியங்கள், விலங்குகள், மலர்கள், பழம், காய் போன்ற ஓவியங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் ஆகியவை இளைஞர்களின் முயற்சியால் வரையப்பட்டுள்ளது.
மேலும் அந்த பள்ளியில் உள்ள தோட்டம், குடிநீர் தொட்டிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் சிதிலமடைந்து காணப்படுவதை அரசு கவனம் செலுத்தி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்திய சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
- இதில் 75 பாடகர்களை ஒரே மேடையில் இணைக்கவுள்ளனர்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை ஜே.ஆர்-7 மற்றும் சாதகப் பறவைகள் இணைந்து, ஒரு இசைத் திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. இது குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாக கொண்டாட உள்ளனர். இதன் மூலம் யூனைடட் சிங்கர்ஸ் சேரிட்டபள் டிரஸ்ட் அமைப்பிற்கு நிதி திரட்டவுள்ளனர். 75 முக்கிய பிரமுகர்களை இணைத்து இதில் பங்குப்பெற வைக்கவுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதையும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நீண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.